Virat Kohli Cried In The Bathroom After India Lost
இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலியும், யுஸ்வேந்திர சாஹலும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர். ஆர்சிபி அணியில் சாஹல் விளையாடியபோது இருவருக்கும் இடையே நெருக்கம் உண்டானது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி கேப்டனாக இருந்தபோது யுஸ்வேந்திர சாஹல் அணியில் நம்பர் 1 ஸ்பின் பவுலராக வலம் வந்தார். ஆனால் கோலிக்கு பிறகு மற்ற கேப்டன்கள் சாஹலுக்கு சரிவர வாய்ப்பு அளிக்கவில்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாஹல் இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
25
பாத்ரூமில் கதறி அழுத விராட் கோலி
இந்நிலையில், 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றபோது அதை தாங்க முடியாமல் விராட் கோலி கதறி அழுததாக யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். ''2019 உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டி நாளில் விராட் கோலி பாத்ரூமில் கதறி அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன். நான் கடைசி பேட்ஸ்மேனாகக் அவுட்டாகி திரும்பியபோது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் விராட் கோலி கதறி அழுதார். இதேபோல் கிட்டத்தட்ட அணியில் இருந்த அனைவரும் அழுதனர்'' என்று சாஹல் கூறியுள்ளார்.
35
நான் நன்றாக பந்துவீசியிருக்க வேண்டும்
தொடர்ந்து இது குறித்து பேசிய சாஹல், ''அதுதான் தோனி இந்திய அணிக்காக விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. ஆனால் நான் அந்த போட்டியில் இன்னும் சிறப்பாக பந்துவீசி இருக்க வேண்டும். 10 அல்லது 15 ரன்கள் குறைவாக கொடுத்திருந்தால் அது அணிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கும். அதை நினைத்து இப்போதும் வருந்துகிறேன். நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது'' என்று கூறினார்.
2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. ரோஸ் டெய்லர் (74 ரன்), கனே வில்லியம்சன் (67) அரை சதம் விளாசினார்கள். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்பு விளையாடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆலவுட்டாகி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
55
தோனி ரன் அவுட் தான் திருப்பு முனை
ஒரு கட்டத்தில் 92/6 என பரிதவித்த இந்திய அணியை தோனியும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்து மீட்டனர். ஜடேஜா 59 பந்தில் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து தோனி 50 ரன்கள் எடுத்து எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்து விட்டது. இந்த அரையிறுதி போட்டியில் 1 ரன்னில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.