Sachin Tendulkar and Sourav Ganguly Hundred
Sachin Tendulkar and Sourav Ganguly Scored Centuries in 2 Balls: இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. ஆனால், 3 பந்துகள் மட்டும் இருக்கு. சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இருவருமே 94 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். இதில் யார் சதம் அடிச்சிருப்பாங்கனு நீங்க நினைக்கிறீங்க? இது என்ன புதிர் மாதிரி என்று நினைக்கிறீங்களா? இது புதிர் அல்ல, இந்திய கிரிக்கெட் அணியில் நடந்த ஒரு சம்பவம்.
Sourav Ganguly Retired Hurt, India vs Australia ODI Cricket
இது எப்போது நடந்தது, எப்படி நடந்து, சதம் அடிச்சது யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். சவுரவ் கங்குலி ஒரு பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசி ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். எஞ்சிய 2 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவை. ராகுல் டிராவிட் களத்திற்கு வந்து ரன் அவுட்டில் வெளியேறுகிறார். கடைசியில் சச்சின் டெண்டுல்கர் சிக்ஸர் அடித்தால் சதம், ஒரு ரன் எடுத்தால் இந்தியா வெற்றி. ஒரு பந்து மட்டுமே எஞ்சியிருக்கிறது.
India vs Australia, Sachin Tendulkar Finish Hundred with Six
சிக்ஸர் அடித்தாரா? எதிரணி யார் என்று பார்க்கலாம். இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டி. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. 3 பந்துகள் மட்டுமே மீதம் இருந்தது. சச்சின் மற்றும் கங்குலி இருவருமே 94 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
India vs Australia, Rahul Dravid Run Out
கடைசி ஓவரை ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் வீசினார். இந்த ஓவரில் 4ஆவது பந்தில் இறங்கி வந்து சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்த கங்குலி தசைப்பிடிப்பு காரணமாக ரிட்டயர்டு கர்ட் முறையில் வெளியேறினார். இது வருத்தமாக இருந்தாலும் இந்திய அணிக்கு நல்ல செய்தி தான். ஏனென்றால் கங்குலி சதம் அடித்துவிட்டார். வெற்றிக்கு ஒரு ரன் தேவை. சச்சின் களத்தில் இருக்கிறார். இது அவரும் சதம் அடிக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.
Sachin and Ganguly, Indian Cricket Team, Sachin Tendulkar and Sourav Ganguly Scored Centuries in 2 Balls
அதன் பிறகு ராகுல் டிராவிட் வந்தார். அவர் எதிர்கொண்ட 5ஆவது பந்தில் மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடிய போது டேமியன் மார்ட்டின் பந்தை பிடித்து ஸ்டெம்பை நோக்கி குறி பார்த்து எறிந்தார். இதில் ராகுல் டிராவிட் ரன் அவுட்டானார். நடுவரின் தீர்ப்புக்கு கூட காத்திருக்காமல் நடையை கட்டினார்.
India vs Australia ODI Cricket, Sachin and Ganguly Both are Century
கடைசியில் ஒரு பந்தில் ஒரு ரன் தேவை. சச்சின் களத்தில் இருக்கிறார். அவர் 1 ரன்னுக்கு முயற்சிப்பாரா? சதத்திற்கு முயற்சிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒருவேளை அந்த பந்தில் சச்சின் அவுட்டானால், போட்டி டிராவில் முடியும். கடைசி பந்தை பவுன்சராக மெக்ராத் வீசவே சச்சின் எளிதாக சிக்ஸருக்கு விரட்டினார். இதில், இந்திய அணியும் ஜெயிச்சிடுச்சு, சச்சினும் சதம் விளாசிவிட்டார். இருவருமே நாட் அவுட்.
Indian Cricket Team, Sourav Ganguly, Sachin Tendulkar
இதில் ஆஸ்திரேலியா செய்த முட்டாள் தனம் என்ன தெரியுமா, ஒன்று விக்கெட் எடுக்கவில்லை. மற்றொன்று தோற்றாலும் பரவாயில்லை என்று பந்தை வைடாக வீசியிருக்க வேண்டும். இல்லையென்றால் யார்க்கருக்கு முயற்சித்து விக்கெட் எடுத்திருக்க வேண்டும். இப்படி 2 பந்தில் 2 பேட்ஸ்மேன்களையும் சிக்ஸர் அடிக்க வச்சதோடு மட்டுமல்லாமல் கங்குலி மற்றும் சச்சின் இருவரையும் சதமும் அடிக்க வைத்துவிட்டார்கள்.
Sourav Ganguly and Sachin Tendulkar
இப்படி ஒரு சுவாரஷ்யமான சம்பவம் கிரிக்கெட்டில் மட்டுமே நிகழும். படிக்கும் போதே இப்படி இருக்கிறது என்றால் இந்தப் போட்டியை நேரில் பார்க்கும் போது எப்படி இருந்திருக்கும். இது போன்று சுவாரஸ்யமான கிரிக்கெட் ஸ்டோரி பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்.