TNPL 2025: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்ற திண்டுக்கல்!

Published : Jul 04, 2025, 11:16 PM IST

டிஎன்பிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்றது. 

PREV
14
TNPL 2025: Dindigul Dragons Beat Chepauk Super Gillies To Reach Final

டிஎன்பிஎல் தொடரின் 2வது எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் சென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆஷிக் (8 ரன்), மோஹித் ஹரிகரன் (4 ரன்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்கள்.

24
நாராயண் ஜெகதீசன் அதிரடி ஆட்டம்

பின்பு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அபராஜித் 44 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 67 ரன்கள், நாராயண் ஜெகதீசன் 6 சிக்சருடன், 4 பவுண்டரியுடன் 81 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் விஜய் சங்கர் (0), ஸ்வப்னில் சிங் (6) சொதப்பியதால் போதிய ரன்கள் வரவில்லை. 

இதனால் அந்த அணியில் 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. திண்டுக்கல் அணி தரப்பில் ரவிச்சந்திரன் சசிதரன் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், வெங்கடேஷ் புவனேஷ்வர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

34
சிக்சர் மழை பொழிந்த விமல் குமார்

பின்னர் 179 ரன்கள் எடுத்தால் பைனலுக்கு செல்லலாம் என்ற கனவுடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கம் கொடுத்தனர். கேப்டன் அஸ்வின் 20 பந்தில் 21 ரன், ஷிவம் சிங் 17 பந்தில் 21 ரன் எடுத்து அவுட்டானார்கள். பாபா இந்திரஜித் 31 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் விளாசினார். ஆனால் மான் பாஃப்னா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் விமல் குமார் சிக்சர் மழை பொழிந்து அதிரடி அரைசதம் அடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

44
பைனலுக்கு சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்

18.4 ஓவர்களில் திண்டுக்கல் அணி 6 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று டிஎன்பிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 30 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 65 ரன்கள் விளாசிய விமல்குமார் ஆட்டநாயகன் விருது வென்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த 2024ம் ஆண்டு கோப்பையை திண்டுக்கல் அணி வென்றது. அதேபோல் இந்த முறையும் கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories