சுப்மன் கில்லை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்கள்! சச்சின் சொன்னது தான் 'இதில்' ஸ்பெஷல்!

Published : Jul 03, 2025, 11:22 PM IST

இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்லை சச்சின், யுவராஜ் சிங், அஸ்வின் ஆகியோர் பாராட்டினார்கள். இது தொடர்பாக இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 

PREV
14
Sachin, Yuvraj Singh Praise Shubman Gill For Scoring Double Hundred

பர்மிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்து வரலாற்று சாதனை படைத்தார். இதன் மூலம் சேனா (SENA) நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

24
சுப்மன் கில் இரட்டை சதம்

மேலும் இங்கிலாந்து மண்ணில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெற்றுள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் அதிகப்பட்ச தனிநபர் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்ற அவர் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இது தவிர வெளிநாட்டில் இந்திய அணி கேப்டனாக அதிக ரன் அடித்த விராட் கோலி சாதனையையும் சுப்மன் கில் ஓவர்டேக் செய்துள்ளார்.

ஏராளமான சாதனை

இது மட்டுமின்றி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் (2002 இல் ஓவலில் 217) மற்றும் சுனில் கவாஸ்கர் (1979 இல் ஓவலில் 221) ஆகியோருடன் இணைந்து இங்கிலாந்தில் டெஸ்டில் இந்தியாவுக்காக இரட்டை சதம் அடித்த மூன்றாவது வீரர் ஆனார். 25 வயதில் சவாலான இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்லுக்கு இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

34
சுப்மன் கில்லுக்கு பாராட்டு மழை

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் சுப்மன் கில்லை பாராட்டித் தள்ளியுள்ளனர். இது தொடர்பாக யுவராஜ் சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சுப்மன் கில்லுக்கு தலை வணங்குகிறேன். பெரிய போட்டியில் இரட்டை சதத்தை எளிதாக காட்டினார். நன்றாக விளையாடினார். தகுதியான இரட்டை சதம். அவரது நோக்கம் தெளிவாக இருக்கும்போது தடுத்து நிறுத்த முடியாதவர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு'' என்று தெரிவித்துள்ளார்.

சச்சின் சொன்னது என்ன?

சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் அர்ப்பணிப்புடன் விளையாடிய விதத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ''சுப்மன் கில்லின் தலைமைப் பதவிக்கு அற்புதமான தொடக்கம். இது அவருக்கு முன்னேற ஒரு நல்ல உலகத்தை உருவாக்கும். இந்தியா இப்போது நாள் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டிய நேரம் இது'' என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

44
சபாஷ் கேப்டன்

இதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், ''இங்கிலாந்து மண்ணில் 200 ரன்கள் எடுத்த முதல் இந்திய கேப்டன். சுப்மன் கில்லின் கண்களில் உறுதிப்பாடு மிகவும் தெளிவாகத் தெரிந்தது. வசீகரமான ஸ்ட்ரோக்குகள் முதல் திடமான தற்காப்பு வரை இந்த சிறப்பு இன்னிங்ஸில் அனைத்தும் இருந்தன'' என்று கூறியுள்ளார். ''தலைமைத்துவம் மிகச்சிறந்தது! சபாஷ், கேப்டன்! சுப்மன் கில் கேப்டனின் ஆட்டம்'' என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories