2வது டெஸ்ட்டிலும் சுப்மன் கில் சூப்பர் சதம்! கோலி சாதனை சமன்! சரிவில் இருந்து மீண்ட இந்தியா!

Published : Jul 03, 2025, 12:05 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் சதம் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் விராட் கோலி சாதனையை சமன் செய்துள்ளார். கில் சதத்தால் இந்திய அணி முதல் நாளில் சரிவில் இருந்து மீண்டுள்ளது.

PREV
15
India vs England 2nd Test: Shubman Gill Equals Virat Kohli's Record By Scoring Century

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிதானமாக விளையாடிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 26 பந்துகளை சந்தித்து 2 ரன் மட்டுமே எடுத்து வோக்ஸ் பந்தில் போல்டானார்.

25
கருண் நாயர், ஜெய்ஸ்வால் அதிரடி

அதன்பிறகு ஜோடி சேர்ந்த கருண் நாயரும், ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடினார்கள். கிளாசிக் ஷாட்களை அடித்த கருண் நாயர் 50 பந்தில் 31 ரன் எடுத்து கார்ஸின் பந்தில் கேட்ச் ஆனார். மறுபக்கம் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் சூப்பராக விளையாடினார். 

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். இதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு 42 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 25 ரன் எடுத்து சோயிப் பஷிர் சுழல் வலையில் வீழ்ந்தார்.

சுப்மன் கில் சதம்

பின்பு வந்த நிதிஷ் குமார் ரெட்டியும் 1 ரன்னில் வோக்ஸ் பந்தில் கிளின் போல்டானதால் இந்திய அணி 211/5 என பரிதவித்தது. பின்பு ஜோடி சேர்ந்த சுப்மன் கில்லும், ஜடேஜாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். கேப்டன் என்ற பொறுப்பை ஏற்று பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் ஏதுவான பந்துகளை எல்லைகோட்டு விரட்டினார். 

ஜடேஜாவும் சிறந்த ஷாட்களை விளையாடினார். தொடர்ந்து அற்புதமாக விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 16வது சதத்தை விளாசினார். அவர் 199 பந்துகளில் சதம் அடித்தார்.

35
முதல் நாளில் இந்திய அணி 310 ரன்கள்

மறுபக்கம் ஜடேஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் நாள் ஆட்ட நேட்ர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. 

சூப்பர் சதம் விளாசிய கேப்டன் சுப்மன் கில் 216 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 67 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். 

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளும், பென்ஸ் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ் மற்றும் சோயிப் பஷிர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

45
சுப்மன் கில் சாதனை

இந்த போட்டியில் பொறுப்பான கேப்டனாக சதம் விளாசிய சுப்மன் கில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று சதங்களை அடித்த நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். 

லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் சதம் அடித்திருந்த அவர் 2024ம் ஆண்டு தரம்சாலாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டிலும் சதம் விளாசி இருந்தார். 

முகமது அசாருதீன் (1984-1985), திலீப் வெங்சர்க்கார் (1985-1986) மற்றும் ராகுல் டிராவிட் (2002 & 2008-2011) ஆகியோர் கில்லை விட முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை படைத்திருந்தனர்.

55
கோலி, சுனில் கவாஸ்கர் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த மூன்றாவது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் சுப்மன் கில் படைத்தார். விஜய் ஹசாரே (டெல்லி மற்றும் பிராபோர்ன் 1951-52) மற்றும் அசாருதீன் (லார்ட்ஸ் மற்றும் ஓல்ட் டிராஃபோர்டு 1990) ஆகியோருக்குப் பிறகு கில் இந்த சாதனையை பெற்றுள்ளார்.

 இதுமட்டுமின்றி இந்திய அணி கேப்டனாக அறிமுகமான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த விராட் கோலி, ஹசாரே மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் சுப்மன் கில்லும் பட்டியலில் இணைந்துள்ளார். விராட் கோலி கேப்டனாக அறிமுகமான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories