பவுண்டரிகளாக விளாசி துரிதமாக ரன்கள் சேகரித்தனர். நன்றாக விளையாடிய ஜடேஜா அரை சதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் 150 ரன்களை கடந்து இங்கிலாந்து டெஸ்ட்டில் 150 ரன்களை கடந்த 2வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். உணவு இடைவேளைக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா அவுட் ஆனார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 137 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்து ஜோஷ் டங்கின் பவுன்ஸ் பந்தில் கேட்ச் ஆனார்.
சுப்மன் கில் இரட்டை சதம்
6வது விக்கெட்டுக்கு சுப்மன் கில், ஜடேஜா ஜோடி 200க்கும் அதிகமான ரன்கள் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கிய நிலையில், மறுபக்கம் தனது டிரேட் மார்க் ஷாட்களால் பவுண்டரிகள், சோயிப் பஷிர் பந்தில் சிக்சர்களை பறக்க விட்ட சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாவது இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
நிதானமாகவும், தேவைப்படும்போது அதிரடியாகவும் விளையாடிய சுப்மன் கில் 311 பந்துகளில் 21 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 200 ரன்கள் அடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன், சேனா நாடுகள் முதல் இரட்டை சதம் அடித்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார்.