SA vs IND, KL Rahul: டிசம்பர் 26: கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மறக்க முடியாத நாள்!

First Published | Dec 27, 2023, 8:32 AM IST

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறார்.

India vs South Africa

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படி நின்று விளையாடவில்லை.

KL Rahu

வருவதும், செல்வதுமாகவே இருந்தனர். ரோகித் சர்மா 5, சுப்மன் கில் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உணவு இடைவேளை வரையில் சிறிது நேரம் தாக்கப் பிடித்தனர். அதற்கு பிறகு ஒரு ரன் கூட அடிக்காமல் ஷ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். விராட் கோலி 5 ரன்கள் கூடுதலாக அடித்து 38 ரன்களில் வெளியேறினார்.

Tap to resize

KL Rahul

இவர்களைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்களில் நடையை கட்டவே, இந்திய அணி 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. இந்த நிலையில் தான் கேஎல் ராகுல் உடல் ஷர்துல் தாக்கூர் களமிறங்கி சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். நெற்றியில் காயம் அடைந்து கூட விளையாடி       24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜஸ்ப்ரித் பும்ரா 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

Team India: IND vs SA Test, Centurion

கடைசியாக மழை குறுக்கீடு காரணமாக 59 ஓவர்களிலேயே முதல் நாள் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் மட்டுமே நிலையாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14ஆவது அரைசதம் கடந்தார். முதல் நாள் முடிவில் அவர் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது சிராஜ் 10 பந்துகள் பிடித்து ரன் ஏதும் இல்லாமல் களத்தில் இருந்தார்.

South Africa vs India Test Cricket

இந்த நிலையில் தான் டிசம்பர் 26 கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

KL Rahul Half Century

கடந்த 2021 ஆம் ஆண்டு செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி 260 பந்துகளில் 123 ரன்கள் குவித்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

KL Rahul Centurion Test 2023

தற்போது மீண்டும் செஞ்சூரியனில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 70* ரன்கள் (நாட் அவுட்) எடுத்து இந்திய அணி 208 ரன்கள் எட்ட முக்கிய காரணமாக இருந்தார். மேலும், தொடர்ந்து விளையாடி வருகிறார். காயத்திலிருந்து மீண்டு வந்து உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடி 462 ரன்கள் குவித்தார்.

KL Rahul and South Africa

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு கேப்டனாக இருந்து 2-1 என்று தொடரை கைப்பற்றினார். தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தால் அது அவரது சாதனையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!