பிரசித் கிருஷ்ணா அறிமுகம், டீம் இந்தியாவில் யாரெல்லாம் இருக்காங்க? டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்!

Published : Dec 26, 2023, 02:11 PM IST

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.

PREV
16
பிரசித் கிருஷ்ணா அறிமுகம், டீம் இந்தியாவில் யாரெல்லாம் இருக்காங்க? டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்!
Team India

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதைத் தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றி 2023 ஆம் ஆண்டில் ஒருநாள் தொடரை வெற்றியோடு முடித்துள்ளது.

26
South Africa vs India 1st Test

இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. அந்த வகையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியனில் நடக்கிறது. பிற்பகல் 1 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில், மோசமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது டாஸ் போடப்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

36
SA vs IND Test

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகிறார். அவருக்கு துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் தொடருக்கான கேப் வழங்கினார். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், ரோகித் சர்மாவிற்கு அந்த வாய்ப்பு அமைந்துள்ளது.

46
Team India

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

56
India Test Squad

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

66
South Africa Squad

தென் ஆப்பிரிக்கா:

டீல் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஸி, டெம்பா பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்காம், கெயில் வெர்ரேனே (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், ஜெரால்டு கோட்ஸி, கஜிஸோ ரபாடா, நந்த்ரே பர்கர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories