SA vs IND 1st Test Toss: ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் சிக்கல் – மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம்!

Published : Dec 26, 2023, 01:34 PM IST

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டுள்ளது.

PREV
19
SA vs IND 1st Test Toss: ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் சிக்கல் – மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம்!
SA vs IND 1st Test Toss

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. 1 மணிக்கு டாஸ் போட வேண்டிய நிலையில் ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

29
SA vs IND Tet Toss

முதல் நாள் ஆட்டமானது மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அக்யூவெதர் ரிப்போட்டின் கருத்துப்படி, 96 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறாப்படுகிறது. மேலும், 38 சதவீதம் வரையில் இடியுடன் கூடி மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

39
Team India

முக்கியமாக மேகமூட்டத்துடன் இருப்பதோடு அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்," என்று கூறுகிறது, இது செஞ்சுரியன் உள்ளூர் நேரப்படி காலை 7 முதல் 9 மணிக்குள் இடியுடன் கூடிய மழையை சந்திக்கும் என்றும், பிற்பகலில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

49
Indian Cricket Team

அசாரூதீன், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, கோலி ஆகியோர் தலைமையிலான இந்திய அணி இதுவரையில் தென் ஆப்பிரிக்கா சென்று ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றவில்லை. இவர்கள் யாரும் செய்யாத சாதனையை ரோகித் சர்மா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

59
Ravichandran Ashwin

ஏற்கனவே டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும், டெஸ்ட் தொடருக்கு மட்டுமே தற்போது ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார்.

69
Team India

கடந்த 1992ல் – முகமது அசாருதீன்

1996ல் – சச்சின் டெண்டுல்கர்

2001ல் – சவுரங் கங்குலி

2006- 07ல் – ராகுல் டிராவிட்

2010 – 11 மற்றும் 2013 – 14ல் – எம்.எஸ்.தோனி

2018 – 19 மற்றும் 2021 – 22ல் – விராட் கோலி ஆகியோரது தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க்காவில் சுற்றுப்பயணம் செய்தது.

79
Indian Cricket Team

இதில், ஒரு முறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை. இதுவரையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த 23 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த கேப்டன்களின் வரிசையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

89
SA vs IND Test Series

ஏற்கனவே உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவிய ரோகித் சர்மா, இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

99
Virat Kohli

தென் ஆப்பிரிக்காவில் முகாமிட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories