ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அதிரடியாக விலகிய ஆஸ்திரேலிய அணி..! இதுதான் காரணம்

First Published Jan 12, 2023, 3:35 PM IST

ஆஃப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க, பணிகளுக்கு செல்ல, விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள தலிபான் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளது.
 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரையிலான ஒன்றரை மாதத்தில் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதன்பின்னர் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்று ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடவிருந்தது.

ஆனால் ஆஃப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசு, அந்நாட்டு பெண்கள் மீது ஒடுக்குமுறையை கையாண்டுவருகிறது. ஆஃப்கானிஸ்தான் பெண்கள் கல்வி கற்க, வேலைக்கு செல்ல, விளையாட கடும் கட்டுப்பாடுகளை விதித்து பெண்கள் மீது அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையை கையாண்டுவருகிறது.

IND vs AUS: ஆஸி., டெஸ்ட் அணியில் 4 ஸ்பின்னர்கள்.. இந்தியாவை சமாளிக்க 4 ஆண்டுக்கு பிறகு இறக்கப்படும் வீரர்
 

பெண் சுதந்திரத்திற்கு எதிரான ஆஃப்கானிஸ்தான் தலிபான் அரசின் செயல்பாட்டை கண்டிக்கும் விதமாகவும், அதற்கு எதிர்ப்பு விதமாகவும், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மறுத்து விலகிவிட்டது ஆஸ்திரேலிய அணி.

பும்ராவின் முதுகுவலி.. இந்தியாவிற்கு தலைவலி..! நியூசி., & ஆஸி., தொடரிலிருந்தும் விலகுகிறார் பும்ரா

அரசாங்கம், பங்குதாரர்கள் என அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துவிட்டது.

click me!