விஜய் ஹசாரே டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கி, முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளனர். இந்த இருவரின் அடுத்த போட்டி எப்போது என்று பார்ப்போம்.
2025-26 விஜய் ஹசாரே டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பாக கம்பேக் கொடுத்துள்ளனர். கோலி 15 ஆண்டுகளுக்குப் பிறகும், ரோஹித் 8 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த தொடரில் விளையாடினர்.
27
சதம் அடித்து அசத்திய ரோ-கோ ஜோடி
இந்த இரண்டு வீரர்களும் தங்களது கம்பேக் போட்டியில் அதிரடி சதம் அடித்து, அதை மறக்க முடியாததாக மாற்றினர். பெங்களூருவில் ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய கோலி, 101 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். ஆந்திராவுக்கு எதிராக டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
37
16,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர்
ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் ரன் கணக்கைத் தொடங்கியதும், லிஸ்ட் 'ஏ' கிரிக்கெட்டில் 16,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன் சச்சின் இந்த சாதனையை செய்துள்ளார்.
மும்பை அணிக்காக களமிறங்கிய ரோஹித் சர்மா, சிக்கிம் அணிக்கு எதிராக 94 பந்துகளில் 18 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 155 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
57
கோலியின் அடுத்த போட்டி எப்போது?
விராட் கோலி டிசம்பர் 26 அன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த போட்டி காலை 9 மணிக்கு பெங்களூருவில் உள்ள மைதானத்தில் நடைபெறும்.
67
ரோஹித்தின் அடுத்த போட்டி எப்போது?
ரோஹித் சர்மா டிசம்பர் 26 அன்று உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மும்பைக்காக விளையாடுவார். காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.
77
லைவ் ஸ்ட்ரீம் இல்லை
துரதிர்ஷ்டவசமாக, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடும் விஜய் ஹசாரே டிராபியின் அடுத்த போட்டியை எந்த டிவி அல்லது ஓடிடி தளத்திலும் நேரடியாக பார்க்க முடியாது.