ஜூனியர் சச்சின் ரெடி.. வைபவ் சூர்யவன்ஷியை உடனே இந்திய டீம்ல சேருங்க.. வலுக்கும் கோரிக்கை!

Published : Dec 25, 2025, 03:50 PM IST

விஜய் ஹசாரே டிராபி தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி வெறும் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்சர்கள் விளாசி 190 ரன்கள் விளாசி பிரம்மிக்க வைத்தார்.

PREV
13
வைபவ் சூர்யவன்ஷி அசத்தல் பேட்டிங்

இந்திய இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து குறைந்த பந்துகளில் சதம் மேல் சதம் அடித்து அசத்தி வருகிறார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக வெறும் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். 

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்திய இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை, புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டுள்ளார். 14 வயதான சூர்யவன்ஷியை தேசிய அணிக்கு அழைக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

23
சசி தரூர் வைத்த கோரிக்கை

"கடைசியாக ஒரு பதினான்கு வயது சிறுவன் இத்தகைய அபாரமான கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தியது சச்சின் டெண்டுல்கர்தான். அவர் என்ன ஆனார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 

இன்னும் நாம் எதற்காக காத்திருக்கிறோம்? வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவுக்காக!" என்று சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, கௌதம் கம்பீர், பிசிசிஐ, சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஜித் அகர்கரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்குகளையும் டேக் செய்துள்ளார்.

33
84 பந்துகளில் 190 ரன்கள் அடித்து அசத்தல்

வைபவ் சூர்யவன்ஷியை சசி தரூர் இந்த அளவுக்கு புகழ்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. விஜய் ஹசாரே டிராபி தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி வெறும் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்சர்கள் விளாசி 190 ரன்கள் விளாசி பிரம்மிக்க வைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேனின் இரண்டாவது வேகமான சதம் இதுவாகும்.

டி வில்லியர்ஸின் சாதனை முறியடிப்பு

மேலும் ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் (14 வயது 272 நாட்கள்) என்ற பெருமையை அவர் பெற்றார். அத்துடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை சூர்யவன்ஷி முறியடித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories