தனது ESPNcricinfo கட்டுரையில், தன்னைப் பற்றி 'ஏதோ' சொல்லப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததாக பவுமா கூறினார். பின்னர், மூத்த இந்திய வீரர்களான ரிஷப் பன்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மன்னிப்பு கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அந்த கருத்தை தான் கேட்கவில்லை என்றும், தனது அணியின் ஊடக மேலாளரிடம் சரிபார்த்த பின்னரே அது பற்றித் தெரிந்து கொண்டதாகவும் பவுமா குறிப்பிட்டார்.
மன்னிப்பு கேட்ட பும்ரா, ரிஷப் பண்ட்
"என் பக்கத்தில் இருந்து, அவர்கள் தங்கள் மொழியில் என்னைப் பற்றி ஏதோ சொன்ன ஒரு சம்பவம் நடந்தது எனக்குத் தெரியும். நாள் முடிவில், இரண்டு மூத்த வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா வந்து மன்னிப்பு கேட்டனர். மன்னிப்பு கேட்கப்பட்டபோது, அது எதைப் பற்றியது என்று எனக்குத் தெரியவில்லை, அந்த நேரத்தில் நான் அதைக் கேட்கவில்லை.
பின்பு மேனேஜரிடம் இது பற்றி கேட்டு அறிந்து கொண்டேன். களத்தில் நடக்கும் சம்பவங்கள் களத்திலேயே விடப்பட்டாலும், பேசப்பட்ட வார்த்தைகள் மறக்கப்படுவதில்லை. இதுபோன்ற தருணங்கள் நீடித்த பகையை உருவாக்குவதை விட, உந்துதலாகவே அமைகின்றன'' என்று தெரிவித்தார்.