சஞ்சு சாம்சன் பிரதான விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரராக இருந்தாலும், டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராகக் களமிறங்குவதே சிறந்தது என்று கிஷனின் சிறுவயது பயிற்சியாளர் உத்தம் மஜூம்தார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெலிகாம் ஏசியா ஸ்போர்ட்ஸிடம் பேசிய அவர், ''ஆடும் லெவனை அணி நிர்வாகம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனாலும், பவர் பிளேயில் அபிஷேக்குடன் இஷான் கிஷன் இருப்பது அதிக பலனளிக்கும் என நான் நினைக்கிறேன்.
நியூசிலாந்து தொடரில் சஞ்சுக்கு வாய்ப்பு
மிடில் ஓவர்களில் இஷன் கிஷனால் பேட்டிங் செய்ய முடியும் என்றாலும், ஐபிஎல் மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஒரு தொடக்க வீரராக அவர் எவ்வளவு அபாயகரமானவர் என்பதை நிரூபித்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சனே தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.