இந்த சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கான சீசனாக அமைந்தது. உம்ரான் மாலிக், மோசின் கான், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சென், சிமர்ஜீத் சிங், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் அருமையாக பந்துவீசி எதிரணி வீரர்களை தெறிக்கவிட்டனர்.