#AUSvsIND ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோஹித்..? தாதா சொன்ன தரமான அப்டேட்

First Published Nov 3, 2020, 9:23 AM IST

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறுவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், ஐபிஎல் முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
undefined
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான 3 விதமான போட்டிகளுக்குமான இந்திய அணி கடந்த 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.
undefined
ஐபிஎல்லின்போது, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால், கடந்த சில போட்டிகளில் அவர் ஆடவில்லை. இந்த சீசனில் அவர் இனிமேல் ஆடமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
undefined
ரோஹித் சர்மா அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மா வலையில் பயிற்சி செய்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டது. ரோஹித் சர்மாவிற்கு காயம் என்பதால் அவர் இந்திய அணியில் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், அவர் பயிற்சி செய்த வீடியோ, அவரது புறக்கணிப்பு குறித்த சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது. ரோஹித் சர்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் கருதினர்.
undefined
ரோஹித் சர்மாவின் உடற்தகுதி மற்றும் அவரது புறக்கணிப்பிற்கான உண்மையான காரணத்தையும் தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. எனவே இதுகுறித்து பிசிசிஐயும் தேர்வாளர்களும் தெளிவுபடுத்த வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியிருந்தார்.
undefined
ரோஹித் சர்மாவின் புறக்கணிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்த நிலையில், ரோஹித் உடற்தகுதி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான அணியில் அவர் இடம்பெறுவார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மாவை கண்காணித்துவருகிறோம். ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடருக்கு ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். அவர் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெறும்பட்சத்தில், தேர்வாளர்கள் அவரை அணியில் சேர்ப்பது குறித்து கண்டிப்பாக பரிசீலிப்பார்கள் என்றார் கங்குலி.
undefined
click me!