ஜஸ்பிரித் பும்ரா செயலால் கொந்தளித்த பிசிசிஐ! இனி நாங்க சொல்றத தான் கேட்கணும்! வரப்போகும் புது ரூல்ஸ்!

Published : Aug 05, 2025, 10:41 PM IST

பிசிசிஐ கொண்டு வரப்போகும் புதிய விதியால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எது என்ன விதி? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
Bumrah Suffers Setback New Rule Brought By BCCI

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. பும்ரா இந்த தொடரின் முதல், மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 

இரண்டாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் காயமடைந்து மீண்ட பும்ரா, ''இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பே 3 போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவேன்'' என்று பிசிசிஐக்கு முன்கூட்டியே தெரிவித்தார்.

24
பும்ரா விதித்த நிபந்தனை

அதனடிப்படையில் பும்ராவின் உடல்நிலை மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டது. 5வது டெஸ்ட் முடிவடைதற்கு முன்பே பும்ரா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பினார். மிக முக்கியமான இங்கிலாந்து தொடரில் பும்ரா முழுமையாக விளையாடாமல் போனவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. 

''பல கோடிகள் சம்பளம் வாங்கி, பல்வேறு சலுகைகளை அனுபவிக்கும் ஒரு வீரர் நாட்டுக்காக முக்கியமான தொடரில் கண்டிப்பாக முழுமையாக விளையாடி இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி நாட்டுக்காக விளையாடும்போது அவர் 3 போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவேன் என நிபந்தனை விதித்து இருக்கக் கூடாது'' என்று ரசிகர்கள் பலர் தெரிவித்தனர்.

34
பும்ராவுக்கு செக் வைக்கும் பிசிசிஐ

இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகள் மட்டும் தான் விளையாடுவேன் என ஜஸ்பிரித் பும்ரா வைத்த நிபந்தனையால் பிசிசிஐ அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் இனி தங்களுக்கு விருப்பமான போட்டிகளை மட்டும் தேர்வு செய்து விளையாட முடியாது என்றும், ஒரு டெஸ்ட் தொடரில் இடம்பெற்றால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் எனவும் பிசிசிஐ புதிய விதிமுறையை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

44
பிசிசிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்

ஜஸ்பிரித் பும்ராவின் செயலால் கடுப்பான பிசிசிஐ இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு வீரர் தேர்வு செய்யப்பட்டால், அவர் அந்த தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். ஒருவேளை, சில போட்டிகளில் மட்டும் விளையாட முடியும் என தெரிவித்தால், அவருக்கு அந்தத் தொடரிலேயே வாய்ப்பு வழங்கப்படாது என்ற முடிவை பிசிசிஐ எடுக்க உள்ளது. பிசிசிஐயின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories