2025-27 WTC பைனலுக்கு செல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு! எப்படி தெரியுமா? முழு விவரம் இதோ!

Published : Aug 05, 2025, 02:45 PM IST

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்த நிலையில், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? பைனலுக்கு செல்லுமா? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
2025-27 WTC! Will India Qualify Final?

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2 2 என்ற கணக்கில் சமன் செய்தது. 2025-27 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியில் இரு அணிகளுக்கும் இது முதல் தொடராகும். இந்த தொடரே சமன் ஆகியிருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இங்கிலாந்தை விட ஒரு படி முன்னேறி 3வது இடம் பிடித்துள்ளது.

24
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்

அதாவது இந்திய அணி 28 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 26 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. அதே வேளையில் 36 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இலங்கை 16 புள்ளிகள் பெற்றிருந்தாலும் 66.67 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்திலும் உள்ளன.

 2025-27 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் ஆறு அணிகளுக்கு எதிராக தலா 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

34
இந்திய அணிக்கு சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் தொடர்கள்

இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற WTC புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களுக்குள் இந்தியா வர வேண்டியது அவசியமாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் டிரா ஆனதால் இந்தியா தனது அடுத்த தொடர்களில் அதிக வெற்றிகளைப் பெற கட்டாயத்தில் உள்ளது. 

இந்திய அணி அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான விளையாடுகிறது. சொந்த மண் என்பதால் இந்தியா இதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இலங்கை மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

44
ஆஸ்திரேலிய தொடர் தான் மிகவும் சவால்

ஆனால் இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக அக்டோபர் 2026ல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது. இதுதான் இந்தியாவுக்கு மிகவும் சவாலாக இருக்கும். உள்ளூர் தொடர்களில் வென்றாலும், இந்த 7 போட்டிகளில் குறைந்தது 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்படலாம். 

ஆகவே சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றும், வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் 2025-27 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories