ஒற்றை கையால் பேட்டிங்! வலியுடன் நாட்டுக்காக போராட்டம்! இந்தியர்கள் மனதை வென்ற வோக்ஸ்!

Published : Aug 04, 2025, 07:12 PM ISTUpdated : Aug 04, 2025, 07:31 PM IST

5வது டெஸ்ட் போட்டியில் ஒற்றை கையால் பேட்டிங் செய்த கிறிஸ் வோக்ஸ் இந்தியர்களின் மனதை வென்றார். படுகாயம் அடைந்த போதும் நாட்டுக்காக அவர் வலியுடன் போராடினார்.

PREV
14
Chris Woakes Bats With One Hand In 5th Test

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. 2வது இன்னிங்சில் 374 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி நெருங்கி வந்து தோற்றது. ஒரு கட்டத்தில் 300/3 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணியை முகமது சிராஜ் தனது அபாரமான பவுலிங் மூலம் 5 விக்கெட் வீழ்த்தி அடிபணிய வைத்தார்.

24
இந்தியர்களின் மனதை வென்ற கிறிஸ் வோக்ஸ்

இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள நிலையில், தோற்றாலும் இங்கிலாந்து அணி வீரர் கிறிஸ் வோக்ஸ் இந்தியர்களின் மனதை வென்றுள்ளார். அதாவது 2வது இன்னிங்சில் கடைசி விக்கெட்டாக ஒற்றை கையில் வோக்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கினார். முதல் இன்னிங்சில் பீல்டிங் செய்தபோது அவர் தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் போட்டியில் இருந்து வெளியேறினார். 2வது இன்னிங்சில் முழுவமையாக பந்துவீசவில்லை.

ஒரு கையில் படுகாயம்

ஆனால் 2வது இன்னிங்சில் அணியை வெற்றி பெற வைக்க வேண்டி ஒரு கையில் கட்டுப்போட்ட நிலையில், ஒற்றை கையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவர் களமிறங்கியபோது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். கடைசி விக்கெட்டுக்கு எதிர்முனையில் இருந்த அட்மின்சன் கடைசி பாலில் ஒரு ரன் எடுத்து கிறிஸ் வோக்ஸை பேட்டிங் செய்ய விடாமல் பார்த்துக் கொண்டார்.

34
களத்தில் கடும் வலியுடன்

ஆனால் காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால் ஒரு ரன் ஓடியபோதும் கிறிஸ் வோக்ஸ் வலியால் துடித்தார். அட்கின்சன் பேட்டிங் செய்ய மறுமுனையில் சுமார் 15 நிமிடத்துக்கும் மேலாக‌ கடும் வலியுடன் அவர் களத்தில் இருந்தார். முடிந்த அளவு போராடிய அட்கின்சன் ஆட்டமிழந்து இந்தியா தோல்வியை தழுவியபோது வோக்ஸ் மிகவும் மனமுடைந்தார். இந்திய கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

44
இந்திய ரசிகர்கள் பாராட்டு

போட்டியின் முக்கியமான தருணத்தில், அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், காயம் காரணமாக வெளியேறாமல் வலியையும் பொருட்படுத்தாமல் வோக்ஸ் நாட்டுக்காக போராடியது அனைவரையும் கவர்ந்தது. அவரை இந்திய ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினர். வோக்ஸின் இந்த அர்ப்பணிப்பு, கிரிக்கெட்டின் உண்மையான விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories