Published : Aug 04, 2025, 04:39 PM ISTUpdated : Aug 04, 2025, 05:02 PM IST
முகமது சிராஜின் அசத்தல் பவுலிங்கால் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. 2வது இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதனால் 374 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது.
24
இந்திய அணி வீரர்கள் அசத்தல் பவுலிங்
5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவையாக இருந்தது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.
34
முகமது சிராஜ் மேஜிக் பவுலிங்
ஜேமி ஸ்மித் 2 ரன்னில் சிராஜ் பந்தில் துருவ் ஜூரலிடம் கேட்ச் ஆனார். பின்பு ஓவர்டன் 9 ரன்னில் சிராஜ் பந்தில் எல்.பி.ட.பிள்யூ ஆனார். இதன்பிறகு ஜோஷ் டங் ரன் ஏதும் எடுக்காமல் பிரசித் கிருஷ்ணா பந்தில் கிளீன் போல்டானார். தோள்பட்டையில் காயம் அடைந்ததால் கிறிஸ் வோக்ஸ் ஒற்றை கையில் பேட்டிங் செய்ய வந்தார். மறுபக்கம் அவர் ஸ்டிரைக் வர விடாமல் அட்கிட்சன் பார்த்துக் கொண்டார். வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிராஜ் வீசிய யார்க்கர் பந்தை அடிக்க முயன்ற அட்கிட்சன் (17 ரன்) கிளீன் போல்டானார்.
இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மிகவும் அசத்தலாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தொடரில் ஏற்கெனவே இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இல்லாத நிலையில், இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு தலைமை தாங்கிய சுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்து வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.