இங்கிலாந்து ஸ்டார் வீரர் ஜோ ரூட் இந்திய அணி பாஸ்ட் பவுலர் முகமது சிராஜை பாராட்டி பேசியுள்ளார். தனது அணிக்காக அனைத்தையும் கொடுக்கிறார் என்று கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. 2வது இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதனால் 374 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளன.
25
ஜோ ரூட் சூப்பர் சதம்
இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறும் நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவையாக உள்ளது. அதே வேளையில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெறலாம். சவாலான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 106/3 என பரிதவித்தது. ஆனால் ஜோ ரூட்டும், ஹாரி ப்ரூக்கும் கிட்டத்தட்ட 200 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதையில் விட்டனர். ஜோ ரூட் (105 ரன்), ஹாரி ப்ரூக் (98 பந்தில் 111) இருவரும் சூப்பர் சதம் விளாசினார்கள்.
35
முகமது சிராஜ் அசத்தல் பவுலிங்
இந்திய அணியில் பும்ரா இல்லாத நிலையில், முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசியுள்ளார். இந்த தொடர் முழுவதும் அற்புதமாக பந்துவீசி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சிராஜ், 5வது டெஸ்ட்டிலும் இதுவரை 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்திய அணி தோல்வி பாதையில் சென்றாலும் மனம் தளராமல் போராடி கடும் உழைப்பை கொடுப்பதை சிராஜ் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்டார் வீரர் ஜோ ரூட், சிராஜை உண்மையான போராளி என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
4ம் நாள் ஆட்ட முடிவில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ ரூட், ''சிராஜ் ஒரு நல்ல வீரர். மிகவும் திறமையான வீரர். இதுபோன்ற ஒரு வீரர் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். சிராஜ் இந்திய அணிக்காக அனைத்தையும் கொடுக்கிறார். கடும் உழைப்பை வெளிப்படுத்துகிறார். சில நேரங்களில் அவரிடம் ஒரு போலி கோபம் இருக்கும். அதை நான் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவேன். கிரிக்கெட்டை அணுகும் விதத்துக்காக சிராஜை நான் பாராட்டுகிறேன்'' என்று தெரிவித்தார்.
55
சிராஜ் விக்கெட் வீழ்த்த இதுதான் காரணம்
தொடந்து பேசிய ஜோ ரூட், ''சிராஜ் ஒரு சிறந்த இளம் வீரருக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். அவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு ஒரு காரணம் உள்ளது. அது அவரது உழைப்பு மற்றும் திறமைதான். அவருக்கு எதிராக விளையாடுவதை நான் ரசிக்கிறேன். அவர் எப்போதும் பெரிய புன்னகையுடன் இருப்பார். மேலும் தனது அணிக்காக அவர் அனைத்தையும் கொடுப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.