சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்துப் பேசிய தோனி, "கடந்த இரண்டு சீசன்களில் நாங்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால் ருத்ராஜ் மீண்டும் வரும்போது எங்களின் பேட்டிங் வரிசை ஒழுங்கமைக்கப்படும். ஐபிஎல் ஏலத்தில் அணியின் பலவீனங்களைச் சரிசெய்ய முயற்சிப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.
இப்போது ஏதும் முடிவு செய்ய முடியாது
அண்மையில் பேசிய தோனி, ''ரசிகர்களிடம் எனக்குக் கிடைத்த அன்பும் பாசமும், மறந்துவிடக் கூடாது. எனக்கு 43 வயது. நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். இது எனது கடைசி ஆண்டு எப்போது என்று அவர்களுக்குத் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன் என்பது ஒரு உண்மை. இந்த ஐபிஎல் முடிந்துவிட்டது.
பிறகு அடுத்த 6-8 மாதங்களுக்கு என் உடல் இந்த வகையான அழுத்தத்தைத் தாங்க முடியுமா என்பதைப் பார்க்க நான் உழைக்க வேண்டும். ஓய்வுத் திட்டங்கள் குறித்து இப்போது எதுவும் முடிவு செய்ய முடியாது'' என்று கூறியிருந்தார்.