சுப்மன் கில் மாஸ்டர் பிளான்! செய்து காட்டிய சிராஜ்! சாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியது எப்படி?

Published : Aug 03, 2025, 12:40 PM IST

சுப்மன் கில்லின் மாஸ்டர் பிளானால் சாக் கிராலியின் விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
IND vs ENG Test! Shubman Gill's Master Plan With Siraj

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 374 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. 34 ரன்களுடன் பென் டக்கெட் களத்தில் இருக்கிறார். தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்து சாக் க்ராஃப்லி-பென் டக்கெட் ஜோடி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியபோது, முகமது சிராஜ் அற்புதமான யார்க்கரில் க்ராஃப்லியை போல்ட் செய்து இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தார்.

24
சுப்மன் கில்லின் மாஸ்டர் பிளான்

சாக் கிராலியை வீழ்த்துவதற்காக சுப்மன் கில், முகமது சிராஜுடன் இணைந்து ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது சிராஜ் பந்துவீச தயரானபோது சுப்மன் கில் ஸ்கொயர் லெக் ஃபீல்டரை பேட்ஸ்மெனுக்கு அருகில் வைத்தார். பொதுவாக, ஒரு பவுன்சர் பந்தை எதிர்பார்த்துத்தான் பேட்ஸ்மேன்கள் இந்தப் பகுதிக்கு ஃபீல்டரை வைப்பார்கள். இந்த மாற்றத்தைப் பார்த்த சாக் கிராலி, சிராஜ் அடுத்த பந்தை ஒரு பவுன்சராக வீசுவார் என்று எதிர்பார்த்தார்.

34
சாக் கிராலி விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்

ஆனால் சிராஜ் அடுத்த பந்தை மிகவும் சாதுர்யமாக யார்க்கராக வீசினார். இதை சற்றும் எதிர்பாராத சாக் கிராலி அந்த பந்தில் கிளீன் போல்டானார். பவுன்சரை அடிக்க உயர்த்திய மட்டையுடன் நின்ற கிராலியால் சரியான நேரத்தில் மட்டையைக் கீழே இறக்க முடியவில்லை. இதனால் ஆஃப் ஸ்டம்ப்பில் பந்து தாக்கியது. பின்னர் சிராஜ் ரொனால்டோ பாணியில் விக்கெட்டைக் கொண்டாடினார். மூன்றாம் நாளின் கடைசி ஓவர் என்பதால் கிராலியின் விக்கெட் விழுந்ததும் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்து வெற்றிக்கு 324 ரன்கள் தேவை

இது சுப்மன் கில்லின் கேப்டன்சிக்கும், முகமது சிராஜின் திறமைக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும். போட்டியின் முக்கியமான கட்டத்தில் இந்த விக்கெட் கிடைத்தது இந்திய அணியினருக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. கடைசி நாளில், ஒன்பது விக்கெட்டுகள் கையில் இருக்க, இங்கிலாந்து வெற்றி பெற 324 ரன்கள் தேவை. இந்தியா வெற்றி பெற ஒன்பது விக்கெட்டுகள் தேவை. முதல் டெஸ்டில் 378 ரன்களைத் துரத்தி வென்ற இங்கிலாந்து, நான்காம் நாளில் 324 ரன்கள் அடித்து வெற்றி பெறுவது சாத்தியம்தான்

44
இந்திய பவுலர்களின் கையில் மேட்ச்

ஆனால் இந்திய பவுலர்கள் சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசினால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியாது. முதல் இன்னிங்சை போலவே ஸ்டெம்புகளை குறிவைத்து நமது பவுலர்கள் பந்துவீச வேண்டும். குறிப்பாக முதல் ஒரு மணி நேரம் நன்றாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தால் பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியும். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் களமிறங்கும் இங்கிலாந்தால் வெற்றி பெறுவது கடினமே. காயம் அடைந்து வெளியேறிய கிறிஸ் வோக்ஸால் இரண்டாவது இன்னிங்சிலும் பேட்டிங் செய்ய முடியாது. ஆகவே இன்னும் 8 விக்கெட்டுகள் எடுத்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories