இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரையும் சமன் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் பாஸ்ட் பவுலர் முகமது சிராஜ் தான். 30 ஓவரில் 104 ரன்கள் கொடுத்த அவர் 5 விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக சாதனை படைத்துள்ளார்.
24
முகமது சிராஜ் சொத்து மதிப்பு
இந்திய அணியில் பல ஆண்டுகளாக முக்கியமான போட்டிகளை வென்று கொடுத்து வரும் முகமது சிராஜ் வருமானத்திலும் கொடி கட்டி பறக்கிறார். சிராஜின் சொத்து மதிப்பு குறித்து விரிவாக பார்ப்போம். முகமது சிராஜின் சொத்து மதிப்பு ரூ.57 கோடி கோடி என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவர் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ள பங்களாவை சொந்தமாக வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் முகமது சிராஜ் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.12.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
34
பிசிசிஐயிடம் இருந்து ரூ.5 கோடி சம்பளம்
மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் முகமது சிராஜ் பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் உள்ளார், இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.5 கோடி சம்பளம் பெறுகிறார். ல் உள்ள வீரர், ஆண்டுதோறும் ரூ. 5 கோடி சம்பாதிக்கிறார். போட்டி கட்டணத்தில் ஒரு டெஸ்டுக்கு ரூ. 15 லட்சம், ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம் மற்றும் ஒரு டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சம் ஆகியவை அடங்கும், இது அவரது வருமானத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.
விளையாட்டில் மட்டுமின்றி பிராண்ட் விளம்பரங்களின் ஒப்பந்தம் மூலமும் சிராஜ் பல கோடிகள் கல்லா கட்டுகிறார். முகமது சிராஜ் MyCircle11, Be O Man, CoinSwitchKuber, Crash on the Run, MyFitness, SG மற்றும் ThumsUp போன்ற சில சிறந்த பிராண்டுகளின் விளம்பர தூதுவராக உள்ளார். கார்களின் பிரியரான சிராஜ் ரேஞ்ச் ரோவர் வோக், BMW 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளார். மற்ற கிரிக்கெட் வீரர்களை போன்று சிராஜும் ஹைதராபாத் நகரில் ஜோஹர்பா என்ற ஒரு ஹோட்டலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.