பிசிசிஐ சம்பள பட்டியலில் அதிரடி மாற்றம்.. ரோகித் சர்மா, விராட் கோலி 'கிரேடு' சரிவு.. யாருக்கு டாப் இடம்?

Published : Feb 09, 2026, 09:27 PM IST

பிசிசிஐ 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கிரேடு சரிந்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்ப்போம். 

PREV
13
பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ரூ. 7 கோடி ஊதியம் வழங்கப்பட்ட 'Grade A+' பிரிவு நீக்கப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலாக கிரேடு A, கிரேடு பB மற்றும் கிரேடு C நடைமுறையில் உள்ளன. கிரேடு A பிரிவில் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர்.

23
விராட் கோலி, ரோகித் சர்மா பி கிரேடுக்கு சரிவு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கிரேடு பி பிரிவுக்கு சரிந்துள்ளனர். இவர்கள் இருவரும் இப்போது ஓடிஐ கிரிக்கெட் மட்டுமே விளையாடுவதால் பி கிரேடுக்கு சரிந்துள்ளனர். 

பி கிரேடில் இவர்களை தவிர வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல், முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளனர்.

சாய் சுதர்சன், வருண் சக்கரவர்த்தி

கிரேடு சி பிரிவில் அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 30 வீரர்கள் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

33
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?

பிசிசிஐ ஏ கிரேடு பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.5 கோடி சம்பளம் கிடைக்கும். கிரேடு பி பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடியும், கிரேடு சி பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியும் சம்பளம் கிடைக்கும்.

வீராங்கனைகளில் யார் டாப் இடம்?

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலை பொறுத்தவரை ஏ கிரேடு பிரிவில் ஸ்மிருதி மந்தனா, ஹர்பிர்மித் கவுர், ஜெமிகா, தீப்தி சர்மா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். கிரேடு பி பிரிவில் 4 வீராங்கனைகளும், கிரேடு சி பிரிவில் 13 வீராங்கனைகளும் என மொத்தம் 21 வீராங்கனைகள் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories