Published : Aug 19, 2025, 03:16 PM ISTUpdated : Aug 19, 2025, 03:44 PM IST
ஆசியக் கோப்பை 2025 தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியில் யார்? யார்? சேர்க்கப்பட்டுள்ளனர். யார்? யார்? நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து பார்ப்போம்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் விளையாடும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
25
ஆசியகோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்த நிலையில் ஆசியக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதித்த கேப்டன் சுப்மன் கில் ஆசியக்கோப்பையில் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி மேட்ச் வின்னிங் பவுலராக அசத்திய முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஆசியக்கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. இதேபோல் இங்கிலாந்து தொடரில் காயம் அடைந்த ரிஷப் பண்ட்டுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
35
ஜிதேஷ் சர்மா உண்டு; ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை
ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியை எடுத்துக் கொண்டால் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அதிரடி வீரர் ஷிவம் துபேவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதேபோல் கேரளாவை சேர்ந்த அதிரடி வீரர் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து முழுமையாக மீளாத பும்ராவும் இடம் பெற்றுள்ளார். ஐபிஎல்லில் அசத்திய ஆர்சிபியின் இளம் வீரர் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே வேளையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடிய ஜெஸ்ய்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. இது மட்டுமின்றி அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் ஷ்ரேயாஷ் ஐயரும் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்திய அணி வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் என 2 ஸ்பின்னர்கள், பும்ரா உள்ளிட்ட 3 பாஸ்ட் பவுலர்கள், அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா என இரண்டு ஆல்ரவுண்ர்கள் என கலவையாக உள்ளது. விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர்.