சிக்ஸர் சூறாவளி கெயிலின் சாதனையை முறியடித்து 19 சிக்ஸர், 8 பவுண்டரியோடு 165 ரன்கள் குவித்த ஆயுஷ் பதோனி!

First Published | Aug 31, 2024, 9:32 PM IST

டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர் ஆயுஷ் பதோனி 19 சிக்ஸர்கள் விளாசி கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார். 55 பந்துகளில் 165 ரன்கள் குவித்த அவர், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

Ayush Badoni

டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், கிழக்கு டெல்லி ரைடர்ஸ், தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ், வடக்கு டெல்லி ஸ்டிரைக்கர்ஸ், சென்ட்ரல் டெல்லி கிங்ஸ், புராணி டெல்லி 6, மேற்கு டெல்லி லயன்ஸ் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

Delhi Premier League 2024

இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் வடக்கு டெல்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தெற்கு டெல்லி கேப்டன் ஆயுஷ் பதோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சர்தக் ரே 11 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

Latest Videos


Ayush Badoni

இதனைத் தொடர்ந்து பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஆயுஷ் பதோனி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதன் காரணமாக தெற்கு டெல்லி அணி 6 ஓவர்களில் 71 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து மிரட்டிய இருவரும் அடுத்தடுத்து 23, 24 பந்துகளில் அரைசதம் கடந்தனர். அப்போது மனன் பரத்வாஜ் வீசிய ஓவரில் பிரியன்ஷ் ஆர்யா 6 சிக்சர்களை பறக்கவிட்டு யுவராஜ் சிங், நிக்கோலஸ் பூரன், கெரான் பொலார்டு 6 சிக்ஸர்கள் சாதனையை சமன் செய்தார்.

NDS vs SDS Match 28

ஆர்யா மற்றும் பதோனியின் அதிரடியால தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் 12 ஓவர்களில் 157 ரன்களைக் கடந்தது. அதன் பின்னர் தனது வெறியாட்டத்தை வெளிப்படுத்திய பதோனி 39 பந்துகளில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து பிரியன்ஷ் ஆர்யாவும் 40 பந்துகளில் சதம் அடித்தார்.

Delhi Premier League 2024

இறுதியில் பதோனி 55 பந்துகளில் 19 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 165 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஆயுஷ் பதோனி 19 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸின் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயிலின் 18 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்தார்.

Ayush Badoni, Delhi Premier League 2024

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் கிறிஸ் கெயில் 18 சிக்ஸர்கள் உள்பட 146* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 175* ரன்கள் நாட் அவுட் சாதனையை இதுவரையில் முறியடிக்கவில்லை. இதே போன்று ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் அதிகபட்சமாக 172 ரன்கள் குவித்துள்ளார். இவர்களது வரிசையில் டி20 கிரிக்கெட்டில் ஆயுஷ் பதோனி 165 ரன்கள் குவித்து 3ஆவது வீரராக இடம் பெற்றுள்ளார்.

Delhi Premier League 2024

பிரியன்ஸ் ஆர்யா 50 பந்துகளில் 10 சிக்ஸ், 10 பவுண்டரியுடன் 120 ரன்களைக் குவித்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களைக் குவித்துள்ளது. அந்த அணி இன்றைய ஒரே போட்டியில் 31 சிக்ஸ், 19 பவுண்டரிகளை விளாசி உள்ளது. பின்னர் விளையாடிய வடக்கு டெல்லி ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்து 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

click me!