Virat Kohli, Sachin Tendulkar
இந்திய கிரிக்கெட் அணியில் அசைக்க முடியாத இடம் பிடித்திருந்தவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்பட்டார். இந்திய அணியில் 24 ஆண்டுகள் இடம் பெற்று விளையாடி ஏராளமான சாதனைகளை தனக்கு சொந்தமாக்கியிருக்கிறார். அவற்றில் பல சாதனைகளை கிங் கோலி மட்டுமின்றி யாராலயும் முறியடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு சச்சின் பல சாதனைகளை படைத்திருக்கிறார். அது என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க…
Sachin Tendulkar Records
சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட்:
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 51 சதங்கள், 68 அரைசதங்கள் உள்பட 15,921 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 248* ரன்கள் ஆகும். அதுமட்டுமின்றி 48 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.
Virat Kohli Records
2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்கள், 30 அரைசதங்கள் உள்பட 8,848 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 254* ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் கிட்டத்தட்ட 7000 ரன்களை கடக்க வேண்டும். அப்படி கடந்தால் தான் சச்சின் சாதனையை முறியடிக்க முடியும்
Sachin Tendulkar and Virat Kohli
சச்சின் டெண்டுல்கர் 51 டெஸ்ட் சதங்கள்:
இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் சச்சின் டெண்டுல்கர் விளாசியுள்ளார். ஆனால், விராட் கோலி 29 சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினாலும் 23 சதங்கள் அடிப்பது என்பது கடினம் தான்.
Sachin Tendulkar
சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள்:
24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், விராட் கோலி 16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பெற்று 26,942 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
Virat Kohli-Rohit Sharma
சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகள்:
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 463 போட்டிகள் இடம் பெற்று விளையாடி 18,426 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், விராட் கோலி 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 13, 906 ரன்கள் எடுத்துள்ளார்.
Virat Kohli
200 டெஸ்ட் சாதனை:
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். ராகுல் டிராவிட் கூட 163 போட்டிகளில் 2ஆவது இடத்தில் இருக்கிறார். விவிஎஸ் லட்சுமணன் 134 டெஸ்ட், அனில் கும்ப்ளே 132, கபில் தேவ் 131, கவாஸ்கர் 125, வெங்சர்கார் 116, சவுரவ் கங்குலி 116, விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களின் பட்டியலில் கோலி 9ஆவது இடத்தில் இருக்கிறார்.