கோலிக்கு ப்ரொபோஸ், அர்ஜூன் டெண்டுல்கருடன் டேட்டிங் செய்த டேனியல் வியாட் தனது காதலியை கரம் பிடித்தார்!

First Published | Aug 31, 2024, 3:30 PM IST

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வியாட், தனது நீண்டகால காதலி ஜார்ஜியா ஹாட்ஜை செல்சியாவில் மணந்து கொண்டார். இந்த ஜோடி கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டது, தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

Danielle Wyatt Engagement

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வியாட், சமீபத்தில் தனது நீண்டகால காதலி ஜார்ஜியா ஹாட்ஜை மணந்தார். செல்சியாவின் பழைய டவுன் ஹாலில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டேனியல் வியாட் மற்றும் ஜார்ஜியா ஹாட்ஜ் ஆகியோர் ஒரே பாலின திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.

Georgie Hodge weds Danielle Wyatt

தற்போது தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த ஜோடி புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளனர். டேனியல் வியாட் மற்றும் ஜார்ஜியா ஹாட்ஜ் இருவருக்கும் தலா 33 வயது. ஜார்ஜியா ஹாட்ஜ் ஒரு விளையாட்டு முகவராக பணியாற்றி வருகிறார். இந்த ஜோடி தங்கள் திருமணத்தில் பிரமாண்டமான வெள்ளை நிற திருமண கவுன் அணிந்து அசத்தினர்.  

Tap to resize

Danielle Wyatt Wedding Photos

தற்போது டேனியல் வியாட், திருமணத்தின் அழகான தருணங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார், 22.08.24 திருமதி & திருமதி வியாட்-ஹாட்ஜ் என்று எழுதியுள்ளார்.

Danielle Wyatt Weds Georgie Hodge

டேனியல் வியாட், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சிதமான பெயர். 2014 ஆம் ஆண்டில், டேனியல் வியாட், தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் (தற்போது எக்ஸ்) கணக்கு மூலம், விராட் கோலி என்னை மணப்பீர்களா? என்று வெளிப்படையாகவே ப்ரொபோஸ் செய்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Danille Wyatt Love Marriage

டேனியல் வியாட், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் காதலியும் கூட. 2010 முதல் டேனியல் வியாட்டுக்கும் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் அறிமுகம் உண்டு. அப்போது அர்ஜுன் டெண்டுல்கருக்கு 10 வயதாக இருந்தபோது, ​​வியாட் நெட்டில் பந்துவீச்சு பயிற்சி அளித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.

Arjun Tendulkar

2022 ஆம் ஆண்டில், டேனியல் வியாட், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒன்றில் அர்ஜுன் டெண்டுல்கருடன் லண்டனில் உள்ள சோஹோவில் மதிய உணவை ரசித்து சாப்பிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Danielle Wyatt

இதையடுத்து அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் டேனியல் வியாட் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் காட்டுத் தீ போல் பரவியது. ஆனால் இதற்கு அடுத்த ஆண்டே அதாவது 2023 ஆம் ஆண்டில் டேனியல் வியாட் தனது காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதன் மூலம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

Latest Videos

click me!