சூர்யகுமார் யாதவ் காயம்: டெஸ்ட் கனவுக்கு தடை?

Published : Aug 31, 2024, 12:59 PM IST

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் காயம் அடைந்துள்ளார். புச்சி பாபு போட்டியில் விளையாடும்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பேட்டிங் செய்யவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், இந்த காயம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

PREV
18
சூர்யகுமார் யாதவ் காயம்: டெஸ்ட் கனவுக்கு தடை?
Suryakumar Yadav Injury

Team India: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் காயம் அடைந்துள்ளார். தற்போது புச்சி பாபு போட்டியில் விளையாடி வருகிறார். தமிழ்நாட்டுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பேட்டிங்கிற்கு வரவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள ரெட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவேன் என்று சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

28
Duleep Trophy 2024

மும்பை, தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான் ஆகியோர் சொதப்ப, சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் புச்சி பாபு தொடரில் தமிழ்நாடு அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

38
Duleep Trophy 2024

சூர்யகுமார் யாதவுக்கு காயம்…

510 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய மும்பை அணி நான்காவது நாளில் 223 ரன்களுக்கு சுருண்டது. ஷம்ஸ் முலானி மட்டும் 68 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டாமல் இருந்தார். தமிழ்நாடு அணி தரப்பில் சி.ஏ.அச்யுத், ஆர்.சாய் கிஷோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் கை காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை. இருப்பினும், போட்டிக்குப் பிறகு அவர் நன்றாகவே இருந்ததால், காயம் தீவிரமானது அல்ல என்பது தெரியவந்தது. முன்னெச்சரிக்கையாக ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். 

48
Duleep Trophy 2024

முன்னதாக, மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. முஷீர் கான் (40), திவ்யான்ஷ் சக்சேனா (26) முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். திவ்யான்ஷை அவுட் செய்து ஆர்.சோனு யாதவ் இந்த பார்ட்னர்ஷிப்பை முறித்தார். அதன்பிறகு மும்பை பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அணியில் 40 ரன்களுக்கு மேல் இரண்டு பார்ட்னர்ஷிப்கள் மட்டுமே இருந்தன. 

58
Buchi Babu Tournament 2024,

ஐயர்-சர்பராஸ் சொதப்பு ஷோ

ஸ்ரேயாஸ் ஐயர் (22), சித்தார்த் (28) மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தனர். மும்பை கேப்டன் சர்பராஸ் 4 பந்துகளில் டக் அவுட் ஆனார். அதன்பிறகு முலானி (68), மோஹித் அவாஸ்தி (0) ஆகியோர் 9வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர். முலானி 96 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்தார். முலானி 9வது வீரராக ஆட்டமிழந்தார்.

68
Suryakumar Yadav Injury

மும்பை அணியில் இடம் பிடித்திருந்த இந்திய நட்சத்திர வீரர்களால் முதல் இன்னிங்ஸிலும் சோபிக்க முடியவில்லை. ஐயர் 2 ரன்கள், சூர்யகுமார் 30 ரன்கள், சர்பராஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர். டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று பார்க்கும் சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மோசமான ஆட்டத்தால் ஏமாற்றமளித்தனர்.

78
Suryakumar Yadav

துலீப் டிராபி

இந்த வார தொடக்கத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தனது விருமத்தை சூர்யகுமார் வெளிப்படுத்தினார். தற்போது உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் சூர்யாவும் ஒருவர். சர்வதேச அரங்கில் குறுகிய வடிவத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிப்ரவரி 2023 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

88
Buchi Babu Tournament 2024,

ஒருமுறை மட்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்ததால் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த ஆண்டு துலீப் டிராபியில் தேசிய அணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்ற முன்னாள் பிசிசிஐ தலைவரும் தற்போதைய ஐசிசி தலைவருமான ஜெய் ஷாவின் உத்தரவுகளைத் தொடர்ந்து பல தேசிய அணி நட்சத்திரங்கள் துலீப் டிராபியில் பங்கேற்பார்கள். இதில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் விளையாட உள்ளனர். 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories