IND vs SA, T20 World Cup 2024
2007 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2ஆவது முறையாக டிராபியை வென்று புதிய சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை வென்றது.
IND vs SA, T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற கையோடு ஜாம்பவான்கள் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் அடுத்தடுத்து டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
IND vs SA, T20 World Cup 2024
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஜஸ்ப்ரித் பும்ரா 15 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகன் விருது வென்றார். இறுதிப் போட்டியில் விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி அடித்த 76 ரன்கள் தான் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
IND vs SA, T20 World Cup 2024
ஆனால், இந்த தொடரில் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் ரோகித் சர்மா தான் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்து அசத்தினார்.
Rohit Sharma
இந்த தொடரில் ரோகித் சர்மாவின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். இந்த நிலையில் தான் யூடியூப்பில் 2 ஸ்லாக்கர்ஸ் பாட்காஸ்டில் நடந்த உரையாடலில் போட்டியின் போது உடன் இருந்த விவ் ரிச்சர்ட்ஸ், ரோகித் சர்மா கிரிஸில் இருந்த நேரம் முழுவதும் பிரமிப்பில் இருந்ததாக யாரோ தன்னிடம் கூறியதாக விமல் குமார் கூறியுள்ளார்.
Indian Cricket Team
ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் எந்த அணியாலும் தடுக்கவே முடியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை பார்த்த போது ரோகித் சர்மா அதனை எடுத்துக் கொண்டது தெளிவாக தெரிந்தது. அது விவ் ரிச்சர்ட்ஸின் சொந்த மைதானம்.
Team India
2024 டி20 உலகக் கோப்பையில் 156.7 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 254 ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை படைத்தார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை வென்ற வரலாற்றில் 2ஆவது கேப்டனாக ரோகித் சர்மா இடம் பெற்றார்.
T20 World Cup 2024
2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அறிமுக சீசனில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது.