கோலி-ரோகித் வாழ்க்கை வரலாறு: திரையில் மின்னப்போகும் ஹீரோக்கள் யார்?

Published : Aug 31, 2024, 04:04 PM IST

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்கள், ராம் சரண் கோலியாகவும், ஜூனியர் NTR ரோகித் சர்மாவாகவும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

PREV
18
கோலி-ரோகித் வாழ்க்கை வரலாறு: திரையில் மின்னப்போகும் ஹீரோக்கள் யார்?
Virat Kohli-Rohit Sharma

விராட் கோலி- ரோகித் சர்மா இருவரும் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரசிகர்கள் இருவரின் கிரிக்கெட் பயணத்தையும் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்க இந்த ஹீரோக்கள்தான் சரியானவர்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

28
Rohit Sharma Biopic Movies

திரையில் ஹிட்மேன்- ரன் மெஷின் ஆவது யார்?  

இந்திய கிரிக்கெட்டுக்கும் பாலிவுட்டிற்கும் பிரிக்க முடியாத உறவு. இந்தியாவின் பல கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளை மணந்துள்ளனர். மன்சூர் அலி கான் பட்டோடி-ஷர்மிளா தாகூர் முதல் விராட் கோலி- அனுஷ்கா, கேஎல் ராகுல்- ஆதியா ஷெட்டி ஜோடிகள் வரை அதற்கு சாட்சி. 

38
Virat Kohli-Rohit Sharma

மேலும் பல கிரிக்கெட் நட்சத்திரங்களின் வாழ்க்கை, பாலிவுட்டில் திரைப்படமாக வந்துள்ளது. அந்த படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்றுப் படம், மகி தி அன்டோல்ட் ஸ்டோரி அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சுஷாந்த் சிங் தோனியாக நடித்திருந்தார். இது 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. 

48
Virat Kohli-Rohit Sharma

யுவராஜ் சிங்... 2011 ஒருநாள் உலகக் கோப்பை ஹீரோ. இந்திய கிரிக்கெட் கண்ட சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சிக்ஸர் கிங்.  இப்படிப்பட்ட ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை திரையில் வரவுள்ளது. ஏற்கனவே யுவி வாழ்க்கை வரலாற்றுப் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் இந்த மூன்று நடிகர்களும் யுவி கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தம் என்று கூறப்படுகிறது. ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.

58
Virat Kohli Biopic Movies

இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்களான விராட் கோலி- ரோகித் சர்மா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரசிகர்கள் இருவரின் கிரிக்கெட் பயணத்தையும் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்களின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், ரசிகர்கள் மட்டும் இந்த நடிகர்கள்தான், கோலி - ரோகித் கதாபாத்திரத்திற்கு சரியானவர்கள் என்று கூறுகின்றனர். 

68
Rohit Sharma and Virat Kohli Biopic Movies

கோலியாக மின்னப்போகும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண்?

ஆம், ராம் சரண் தெலுங்கு திரையுலகின் மெகா பவர் ஸ்டார்.  பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் ராம் சரண், கோலி வேடத்தில் மின்ன வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். ஏற்கனவே யூடியூப்பில் இது தொடர்பான எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. 

78
Rohit Sharma Biopic Movies

ரோகித் சர்மா வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு ஜூனியர் NTR சரியானவர்!

மேலும் ஹிட்மேன் ரோகித் சர்மா வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு தெலுங்கின் யங் டைகர் ஜூனியர் NTR சரியானவர். NTR முகம், அவரது உடல் அமைப்பு எல்லாம் ரோகித்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இதனால் NTR ரோகித் கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வாக இருப்பார்.

88
Virat Kohli-Rohit Sharma

மொத்தத்தில் கோலி- ரோகித் வாழ்க்கை வரலாற்றுப் படம் வர இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அப்போது இவர்களின் கதாபாத்திரத்தில் இவர்களே நடிப்பார்களா? அல்லது வேறு யாராவது நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories