ஆத்தாடி ஆத்தா என்னா அடி! 20 ஓவரில் 308 ரன்: 31 சிக்ஸ், 19 பவுண்டரி - வெறியாட்டம் ஆடிய பதோனி

First Published | Aug 31, 2024, 7:05 PM IST

டெல்லி பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் வடக்கு டெல்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரர் ஆயூஷ் பதோனி 55 பந்துகளில் 165 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

Ayush Badoni

டெல்லி பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வடக்கு டெல்லி ஸ்டிரைக்கர்ஸ் அணியும், தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் இன்று மோதின. டாஸ் வென்ற தெற்கு டெல்லி கேப்டன் ஆயுஷ் பதோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் சர்தக் ரே 11 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

Ayush Badoni

இதனைத் தொடர்ந்து பிரியன்ஷ் ஆர்யா, பதோனி இணை எதிரணி பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். இவர்களின் அதிரடியால் தெற்கு டெல்லி அணி 6 ஓவர்களில் 71 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து மிரட்டிய இருவரும் அடுத்தடுத்து 23, 24 பந்துகளில் அரைசதம் கடந்தனர். அப்போது மனன் பரத்வாஜ் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு பிரியன்ஷ் ஆர்யா மிரட்டினார்.

Tap to resize

Priyansh Arya

இதனால் அந்த அணி 12 ஓவர்களில் 157 ரன்களைக் கடந்தது. அதன் பின்னர் தனது வெறியாட்டத்தை வெளிப்படுத்திய பதோனி 39 பந்துகளில் சதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து பிரியன்ஷ் ஆர்யாவும் 40 பந்துகளில் சதம் கடந்தார்.

South Delhi Superstarz

சதம் கடந்த நிலையில் தெற்கு டெல்லியின் பேட்டிங்கில் கூடுதல் வேகம் ஏற்பட்டது. இறுதியில் பதோனி 55 பந்துகளில் 165 ரன்களை (19 சிக்ஸ், 8 பவுண்டரி) குவித்தார். மறுமுனையில் பிரியன்ஸ் ஆர்யா 50 பந்துகளில் 10 சிக்ஸ், 10 பவுண்டரியுடன் 120 ரன்களைக் குவித்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களைக் குவித்துள்ளது. அந்த அணி இன்றைய ஒரே போட்டியில் 31 சிக்ஸ், 19 பவுண்டரிகளை விளாசி உள்ளது.

Latest Videos

click me!