இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்று இழந்தது. இதையடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து தற்போது நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 3-1 என்று கைப்பற்றியுள்ளது.
டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மோர், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார், மேத்யூ வேட் (கேப்டன்/விக்கெ கீப்பர்), பென் துவர்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், தன்வீர் சங்கா
49
India vs Australia 5th and Final T20I
இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூருவில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிறிஸ் க்ரீனுக்குப் பதிலாக நாதன் எல்லிஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
59
Australia Won The Toss
இதே போன்று இந்திய அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தீபக் சாஹருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரு மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
69
Ravi Bishnoi
பெங்களூரு மைதானத்தில் டி20 போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததில்லை என்ற வரலாறு இருந்தாலும், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியானது அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
79
Yashasvi Jaiswal
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் அதிகபட்ச ஆவரேஜ் ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் 265. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணியானது 12 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணியானது 14 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
89
Ruturaj Gaikwad
இரு அணிகளும் 30 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில், 18 போட்டிகளில் இந்திய அணியும், 11 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மைதானத்தில் இந்திய அணியானது 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. மேலும், 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
99
India vs Australia 5th T20I
இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுத்தால் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 டி20 போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட் 219 ரன்கள் எடு த்துள்ளார். இதே போன்று 4 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.