தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தொடக்க ஜோடியை பிரித்தார். 15 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 28 ரன் அடித்த டிராவிஸ் ஹெட் வருண் பந்தில் திலக் வர்மாவின் சூப்பர் கேட்ச்சில் அவுட் ஆனார். மறுமுனையில் கேப்டன் மிட்ச்செல் மார்ஷ் குல்தீப் யாதவ்வின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசி அசத்தினார். 26 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 46 ரன்கள் அடித்து அதே ஓவரில் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா அபார வெற்றி
பின்பு டிம் டேவிட் (1), ஜோஸ் இங்கிலீஷ் (20) அடுத்தடுத்து குல்தீ, வருண் பந்தில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா வெற்றியை நெருங்கிய வேளையில் பும்ரா மிட்ச்செல் ஓவன் (14), மேத்யூ ஷார்ட் (0) 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. புயல் வேக பந்துவீசிய ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார்.