Ind Vs Aus 2nd T20 Match: Suryakumar Yadav: இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
23
இந்திய அணி பேட்டிங்
இந்நிலையில் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. வழக்கம் போல இந்த முறையும் டாஸ் கோட்டை விட்ட இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், “நான் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங் வேண்டும் என்று தான் கேட்டிருப்பேன். ஆனால் டாஸ் தோற்றும் நாங்கள் விரும்பியது கிடைத்துள்ளதாகக் கூறி மகிழ்ச்சி அடைந்தார்.
33
டீம் இந்தியா
இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா அணியில் இடம் பிடித்துள்ளனர்.