ஆபத்தில் இருந்து மீண்ட ஷ்ரேயாஸ்..! சிகிச்சைக்கு பிறகு உருக்கமான பேச்சு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Published : Oct 30, 2025, 03:29 PM IST

Shreyas Iyer’s Emotional Recovery Update: களத்தில் பீல்டிங் செய்தபோது ஏற்பட்ட கடுமையான காயத்தில் இருந்து மீண்ட ஷ்ரேயார் ஐயர், சமூக ஊடகங்களில் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். 

PREV
14
ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடுமையான காயம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது அலெக்ஸ் கேரியின் கேட்ச்சை சூப்பராக பிடித்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. அதாவது அந்த கேட்ச்சை பின்னோக்கி ஓடிச்சென்று சூப்பராக பிடித்த ஷ்ரேயாஸ் கீழே விழுந்தபோது அவரது இடது விழா எழும்பில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார்.

24
ஷ்ரேயாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

தொடர்ந்து ஷ்ரேயாஸை உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது இடது கீழ் விலா எலும்புக் கூட்டில் காயம் ஏற்பட்டதாகவும் அவரது மண்ணீரலில் கிழிசல் காயம் ஏற்பட்டதகாவும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது. ஷ்ரேயாஸ் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ கூறியிருந்தது.

மனம் திறந்து பேசிய ஷ்ரேயாஸ்

இதனைத் தொடர்ந்து தீவிர சிசிச்சைக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், உடல் நலம் தேறி வரும் ஷ்ரேயாஸ், த‌னது உடல்நிலை தேறி வருவதாக சமூக ஊடகங்களில் முதல் முறையாக பதிவிட்டுள்ளார். ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

34
நன்றியுள்ளவனாக இருப்பேன்

இது தொடர்பாக ஷ்ரேயாஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ''நான் இப்போது குணமடைந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் என் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும், வாழ்த்தியவர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்கள் பிரார்த்தனைகளில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி'' என்று பதிவிட்டுள்ளார்.

44
சூர்யகுமார் யாதவ் நலம் விசாரித்தார்

ஷ்ரேயாஸ் ஐயருக்கு குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் அதிகப்பட்சம் ஒரு வாரம் வரை ஓய்வு தேவைப்படும். பிசிசிஐ அவரது நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஷ்ரேயாஸ் தேறி வருவதாகவும், தனது வழக்கமான பணிகளை செய்வதாகவும் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய சூர்யகுமார், ''ஸ்ரேயாஸுக்கு காயம் என்று தெரிந்த முதல் நாளே நாங்கள் அவரிடம் பேசினோம். முதலில் நான் அவரை அழைத்தேன்.

பின்னர் அவரிடம் போன் இல்லை என்பதை அறிந்தேன். அதனால் நான் பிசியோ கமலேஷை அழைத்தேன். ஸ்ரேயாஸ் நலமாக இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். இரண்டு நாட்களாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் பதிலளிக்கிறார். அதுவே ஸ்ரேயாஸின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதைக் காட்டுகிறது'' என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories