Rohit Sharma: 38 வயதில் நம்பர் 1 வீரர்..! ஐசிசி ஓடிஐ ரேங்கில் புதிய வரலாறு படைத்த ரோகித் சர்மா!

Published : Oct 29, 2025, 06:04 PM IST

இந்திய வீரர் ரோகித் சர்மா 38 வயதில் ஐசிசி ஓடிஐ பேட்டிங்கில் முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஐசிசி ரேங்கில் ரோகித் முதலிடம் பிடிப்பது இதுவே முதன் முறையாகும். 

PREV
14
ஐசிசி பேட்டிங்கில் ரோகித் சர்மா நம்பர் 1

இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார். சிட்னியில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், அபாரமான சதத்தின் மூலம் இரண்டு இடங்கள் முன்னேறி ரோகித் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

24
புதிய வரலாறு படைத்த ஹிட்மேன்

3வது ஓடிஐ போட்டியில் 13 பவுண்டரிகள் மற்றும் மூன்று பிரமாண்ட சிக்ஸர்களை விளாசி 125 பந்தில் 121 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக திகழ்ந்து இருந்தார் ஹிட்மேன் ரோகித். இதேபோல் 2வது ஒருநாள் போட்டியிலும் அவர் 74 ரன்கள் விளாசி இருந்ததால் ஐசிசி தரவரிசையில் முதன் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். இது மட்டுமின்றி அதிக வயதில் ஐசிசி ரேங்கில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

34
சச்சின் சாதனையை முறியடித்தார்

அதாவது 38 வயதான ரோகித் சர்மா 38 ஆண்டுகள் மற்றும் 182 நாட்களில் இந்த சாதனையை எட்டிய மிக வயதான கிரிக்கெட் வீரர் ஆனார். இதன் மூலம் தன்னுடைய 38 ஆண்டுகள் 73 நாட்களில் ஐசிசி ரேங்கில் நம்பர் 1 இடத்தில் இருந்த கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோகித் முறியடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எட்டிய ஐந்தாவது இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆவார்.

44
விராட் கோலி சறுக்கல்

இவருக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஓடிஐ ரேங்கில் நம்பர் 1 இடத்தை அலங்கரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 74 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவர் ஒரு இடம் பின்த‌ங்கி 725 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.

அடிலெய்டு ஓவலில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் 10வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஓடிஐ பவுலிங் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் பந்துவீச்சு முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் ஒரு இடம் சரிந்து 7வது இடத்துக்கு சென்றுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories