இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது.
210
ruturaj maxwell
இதில், ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 123 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 31 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார்.
310
Team India
பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிரேவிஸ் ஹெட் மற்றும் ஆரோன் ஹார்டி இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 47 ரன்கள் எடுத்தனர். ஹார்டி, 16 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்லிஸ் 10 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் கிளீன் போல்டானார்.
410
இந்தியா - ஆஸ்திரேலியா
இதையடுத்து டிராவிஸ் ஹெட் 35 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 ரன்களில் வெளியேறினார்.
510
Maxwell
இதையடுத்து டிராவிஸ் ஹெட் 35 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 ரன்களில் வெளியேறினார்.
610
Glenn Maxwell
கடைசி 12 பந்துகளில் ஆஸியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரை அக்ஷர் படேல் வீசினார். அந்த ஓவரில் மட்டும் வேட் 17 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரில் 4, 2, 2, நோபால், 6, 1, பைஸ் 4 என்று மொத்தமாக 22 ரன்கள் குவிக்கப்பட்டது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 20ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார்.
710
India vs Australia 3d T20
முதல் பந்தில் வேட் பவுண்டரி, 2ஆது பந்தில் சிங்கிள் தட்டி விட்டு வந்தார். கடைசியாக 4 பந்துகளில் 6, 4, 4, 4 என்று வரிசையாக பவுண்டரியும், சிக்ஸும் அடிக்கவே ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
810
கிளென் மேக்ஸ்வெல் சதம்
இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 1-2 என்று கைப்பற்றியது. கடைசி வரை களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸ் உள்பட 104 ரன்கள் குவித்தார். இது அவரது 4ஆவது டி20 சதம் ஆகும்.
910
IND vs AUS 3rd T20
இதன் மூலமாக அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் மேக்ஸ்வெல் இடம் பெற்றார். அவர், 47 பந்துகளில் சதம் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த ரோகித் சர்மாவின் (4 சதங்கள்) சாதனையை சமன் செய்துள்ளார்.
1010
Glenn Maxwell
இந்தப் போட்டியில் 104 ரன்கள் குவித்ததன் மூலமாக இந்தியாவிற்கு எதிராக டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் 554 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஒரு அணிக்கு எதிராக டி20 போட்டியில் 37 சிக்ஸ்கள் விளாசியுள்ளார்.