உயிர் பிரிந்தாலும் களத்தில் பிரியட்டும் என்ன ஆனாலும் நான் நாளைக்கு விளையாடுவேன் உயிரை பணயம்வைத்த ஆசிஸ் நெஹ்ரா

First Published Nov 5, 2020, 8:59 AM IST

ஆசிஸ் நெஹ்ரா இந்திய அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடியவர். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர். டெஸ்ட் போட்டிகளில் 5 வருடம், ஒருநாள் போட்டிகளில், 10 வருடமும் டி20 போட்டிகளில் 8 வருடமும் விளையாடி இருக்கிறார்

இவர் ஆடிய காலம் குறைவு என்றாலும், இவர் ஆடிய போட்டிகளில் எல்லாம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்
undefined
2003 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிக்கு 250 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது இந்த போட்டியில் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
undefined
ஆனால் ஆசிஸ் நெஹரா பந்து வீசத் தொடங்கிய உடன் அடுத்தடுத்து இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார்.மொத்தமாக 6 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்
undefined
ஆனால் இந்த போட்டிக்கு முந்தைய நாள் ஆசிஸ் நெஹராவின் பின் கால்கள் வீங்கி இருந்தது. இதன் காரணமாக ஐஸ் கட்டிகள் நிறைந்த பக்கெட்டில் தனது கால்களை பல மணி நேரம் வைத்திருந்தார்.
undefined
அதனை தாண்டி அடுத்த நாள் வீங்கிய கால்களுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி விளையாடினார். ஷூ மற்றும் ஷாக்ஸ் அணிவதற்கு கூட அவரால் முடியவில்லை. அந்த நேரத்தில்தான் 6 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் ஆசிஸ் நெஹரா என்று தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா
undefined
click me!