இந்திய அணி புறகணித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ரசிகர்களை பார்த்து தனது விரல்களை உயர்த்தி 0 6 என்று காட்டினார்.
இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது ஆறு இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற கூற்றுகளைக் குறிப்பதாகும்.
2 போட்டிகளில் விளையாட தடை
இதேபோல் அரைசதம் அடித்த பிறகு மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையானது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தை சீண்டிய பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் இரண்டு போட்டிகளில் விளையாட ஐசிசி அதிரடியாக தடை விதித்துள்ளது.
இதனால் இன்று (நவம்பர் 4) மற்றும் 6 ஆம் தேதிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தானின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஹாரிஸ் ராஃப் விளையாட முடியாது.