IND vs AUS 4th T20.. சிக்சர் மன்னன் நீக்கம்! சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா? இந்திய அணி பிளேயிங் லெவன்!

Published : Nov 04, 2025, 03:52 PM IST

IND vs AUS 4th T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் சிக்சர் மன்னன் ஷிவம் துபே அதிரடியாக நீக்கப்படுகிறார். சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
15
இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டி20

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வரும் நிலையில், முதல் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. பின்பு 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4வது டி20 போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் வரும் 6ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

25
சொதப்பும் சுப்மன் கில், சூர்யகுமார்

டி20 தொடரை பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார், துணை கேப்டன் சுப்மன் கில் சரியாக விளையாடவில்லை. இதேபோல் திலக் வர்மா, அக்சர் படேல் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. அபிஷேக் சர்மா கலக்குகிறார். வாஷிங்டன் சுந்தரும் அட்டகாசமான பார்மில் உள்ளார். பவுலிங்கை பொறுத்தவரை ஒரே ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைத்த அர்ஷ்தீப் சிங் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார்.

35
ஷிவம் துபே அதிரடி நீக்கம்

பும்ரா, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அக்சர் படேல் நல்ல நிலையில் உள்ளனர். அதே வேளையில் தொடர்ந்து வாய்ப்பு பெற்ற ஆல்ரவுண்டர் ஷிவம் துபே பேட்டிங்கில் தடுமாறுவது மட்டுமின்றி பவுலிங்கிலும் ரன்களை வாரி வழங்குகிறார். இதனால் 4வது டி20 போட்டியில் ஷிவம் துபே அதிரடியாக நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக 3வது போட்டியில் இடம்பெறாத தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிடித்த வீரரான ஹர்சித் ராணா மீண்டும் உள்ளே வருகிறார்.

45
சஞ்சு சாம்சனுக்கு இடம் உண்டா?

மறுபக்கம் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கிடைத்து சரியாக செயல்படாத சஞ்சு சாம்சன் 3வது டி20யில் நீக்கப்பட்டார். 4வது போட்டியிலும் அவர் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன. 3வது போட்டியில் இவருக்கு பதிலாக இடம்பிடித்து அதிரடியில் கலக்கிய ஜிதேஷ் சர்மா தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. மற்றபடி அணியில் வேறு ஏதும் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

55
இந்திய அணி பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20யில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா, ஹர்சித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங்.

Read more Photos on
click me!

Recommended Stories