விராட் கோலி கொடுத்த MRF பேட்டை பயன்படுத்தி 2 பந்தில் 2 சிக்ஸர் பறக்க விட்ட ஆகாஷ் தீப் – ரசிகர்கள் ஹேப்பி!

First Published Oct 1, 2024, 11:50 AM IST

Virat Kohli and Akash Deep: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு விராட் கோலி தான் கையெழுத்திட்ட பேட்டை பரிசாக வழங்கினார். இந்த பேட்டை பயன்படுத்தி ஆகாஷ் தீப் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Virat Kohli's MRF Bat Gift

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கு தான் கையெழுத்திட்ட எம்.ஆர்.எஃப். பேட்டை பரிசாக கொடுத்தார். விராட் கோலி கொடுத்த பேட் புகைப்படத்தை ஆகாஷ் தீப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை வைத்து இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரிங்கு சிங்கை ரசிகர்கள் டிரோல் செய்தனர். ஏற்கனவே விராட் கோலியிடமிருந்து பரிசாக ஒரு பேட் ரிங்கு சிங் பெற்றிருந்தார்.

ஆனால், ரிங்கு சிங்கோ மீண்டும் ஒரு பேட் தரும்படி விராட் கோலியிடம் கேட்டார். இதை வைத்து அவரை ரசிகர்கள் டிரோல் செய்தனர். இந்த நிலையில் தான் விராட் கோலி பரிசாக கொடுத்த பேட்டை பயன்படுத்தி கான்பூரில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 2 பந்துகளில் 2 சிக்ஸர் பறக்க விட்டு அசத்தினார். இந்தப் போட்டியில் அவர் 3ஆவது சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Akash Deep and Virat Kohli

இதன் மூலமாக ரசிகர்கள் ஏன் ஆகாஷ் தீப்பிற்கு மட்டும் பேட் கொடுத்தார். இதே போன்று முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கும் பேட் பரிசாக கொடுத்தால் அவர்களும் சிக்ஸர் அடிப்பார்கள் என்று கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மழையின் காரணமாக கான்பூரில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல் நாள் போட்டியானது மழையால் லேட்டாக தொடங்கப்பட்டு சீக்கிரமாக முடிக்கப்பட்டது. முதல் நாளில் மட்டும் 35 ஓவர்கள் வீசப்பட்டது. இதையடுத்து 2ஆவது மற்றும் 3ஆவது நாள் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Latest Videos


IND vs BAN 2nd Test

இதைத் தொடர்ந்து 4ஆவது நாளான நேற்று போட்டி மீண்டும் தொடங்கியது. இதில், வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். எனினும், கடைசி வரை நின்று விளையாடிய மோமினுல் ஹக் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி அதிரடி விளையாடி ரன்கள் குவித்தது.

IND vs BAN, Kanpur 2nd Test

இதில் இந்தியா ஒரே நாளில் வேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்களை கடந்து புதிய சரித்திரம் படைத்தது. இறுதியாக இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 23 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72 ரன்களும், சுப்மன் கில் 39 ரன்களும், ரிஷப் பண்ட் 9 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி 47 ரன்களும், கேஎல் ராகுல் 68 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 8, ரவிச்சந்திரன் அஸ்வின் 1, ஆகாஷ் தீப் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பும்ரா ஒரு ரன் எடுத்து களத்தில் இருந்தார்.

click me!