இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. லார்ட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23 ஆம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
24
நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங்
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரை வெல்லவோ அல்லது டிரா செய்யவோ வாய்ப்பு கிடைக்கும். ஆகவே 4வது டெஸ்ட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக உள்ள நிலையில், ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 4வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பு செய்தார்.
மேட்ச் வின்னர் ஆகாஷ் தீப்
அர்ஷ்தீப் சிங்கை பொறுத்தவரை இந்த தொடரில் இடம்பெற்றாலும் ஒரு முறை கூட பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. ஏற்கெனவே 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்த ஆகாஷ் தீப் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 4வது டெஸ்ட்டில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆகவே நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் விலகல் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
34
சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ்
இப்படியாக இந்திய அணி பெரும் சிக்கலில் மாட்டியுள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டியில் பெரும் சவால் காத்திருக்கிறது. ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் இல்லாததால், அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படலாம். சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மான்செஸ்டர் டெஸ்டில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் முக்கிய பவுலர்களாக இருப்பார்கள்.
கருண் நாயர் பேட்டிங் சொதப்பல்
நிதிஷ் குமார் ரெட்டியின் விலகல் ஆல்-ரவுண்டர் பிரிவில் காலியிடத்தை உருவாக்கியுள்ளது. ஷர்துல் தாக்கூர் 4வது டெஸ்ட்டில் களமிறங்கினாலும் அவரால் இவர் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்பது கேள்விக்குறி தான். மான்செஸ்டர் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு உதவும் என்பதால், குல்தீப் யாதவ்வை அணியில் சேர்க்க வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங் வரிசையில் கருண் நாயர் பெரிய அளவில் ரன்கள் குவிக்காததால் சிக்கல் எழுந்தது.
மான்செஸ்டர் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியை கூட வென்றதில்லை.கடந்த 35 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் எந்த ஒரு இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை. இந்த சவால்களையும், முக்கிய வீரர்களின் காயங்களையும் தாண்டி இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அணியின் தலைமை மற்றும் மூத்த வீரர்கள் இளம் வீரர்களை வழிநடத்தி, ஒரு சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து, தொடரை சமன் செய்ய கடுமையாக போராட வேண்டியிருக்கும்.