T20 உலகக்கோப்பை.. அபிஷேக் சர்மா விளையாடுவதில் சிக்கல்.. இந்திய அணிக்கு பேரிடி.. என்ன நடந்தது?

Published : Feb 10, 2026, 10:53 PM IST

T20 World Cup 2026: T20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்புள்ளது. அபிஷேக் சர்மாவுக்கு என்னாச்சு? என்பது குறித்து பார்க்கலாம். 

PREV
14
டி20 உலகக்கோப்பை 2026

T20 உலகக்கோப்பையில் தனது தொடக்க ஆட்டத்தை அமெரிக்காவுக்கு எதிராக ஆடிய இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மறக்க முடியாத இன்னிங்ஸ் ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 49 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். இந்திய அணி தனது 2வது ஆட்டத்தை வரும் 12ம் தேதி (வியாழக்கிழமை) நமீபியாவுக்கு எதிராக விளையாட உள்ளது.

24
2வது போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது கடினம்

இந்த 2வது போட்டியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகமே. உடல்நலக்குறைவு காரணமாக அவர் விளையாடுவது சந்தேகம் என துணை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் சர்மா வயிற்று வலி, அஜீரணம் போன்ற சில பிரச்சனைகளால் அவதிப்படுகிறார். போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால், அவர் குணமடைய வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், அவர் விளையாடுவது கடினம்.

34
சஞ்சு சாம்சன் விளையாடுகிறார்

நமீபியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்காக இந்திய அணி பயிற்சி மேற்கொண்டது. அபிஷேக் சர்மா இதில் பங்கேற்கவில்லை. அணியின் மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அபிஷேக் இல்லாதது அணியின் சமநிலையை பாதிக்கலாம். 

அபிஷேக் சர்மா விளையாடவில்லை என்றால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் பேட்டிங் பயிற்சி செய்தார். சுழற்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படலாம்.

44
4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் இந்தியா

டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. ஆனால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பும்ரா மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. போட்டி நடக்கும் டெல்லி மைதானம் சுழலுக்கு சாதகமானது என்பதால் இந்திய அணி வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் என 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ்.

Read more Photos on
click me!

Recommended Stories