T20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியுடன் விளையாட மாட்டோம் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றி உள்ளது. இதனால் வருகின்ற 15ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறுவது உறுதியாகி உள்ளது.
இந்தியா, இலங்கையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான லீக் போட்டி வருகின்ற 15ம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா, வங்கதேசம் இடையேயான அசாதாரண சூழல் காரணமாக நாங்கள் இந்தியாவில் வந்து விளையாட மாட்டோம் அங்கு வங்கதேச வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே வங்கதேசம் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திடீரென கோரிக்கை விடுத்தது.
25
வெளியேறிய வங்கதேசம்
ஆனால் வங்கதேசத்தின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது. தொடரில் இருந்து விலகினால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் பெரும் நிதிச்சுமையை சந்திக்க நேரிடுமென வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தபோதிலும் வங்கதேசம் தனது நிலைப்பாட்டை மாற்றுவதாக இல்லை. இதனால் அந்த அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டு, வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
35
இந்திய போட்டியை தவிர்த்த பாகிஸ்தான்
இதனைத் தொடர்ந்து வங்கதேசத்திற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்த பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக டி20 தொடரைப் புறக்கணிப்பதற்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த போட்டி தடைபடும் பட்சத்தில் ஐசிசி மிகப்பெரிய நட்டத்தை சந்திக்கும். இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இல்லையென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரும் காலத்தில் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டது.
இதனிடையே பாகிஸ்தான், வங்கதேசம், ஐசிசி இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நேரடி போட்டிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதால் வங்கதேசம் சந்திக்கும் நிதி இழப்பை ஈடு செய்யும் விதமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் இடையேயான முத்தரப்பு தொடரை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வங்கதேசத்தில் அதிகப்படியான சர்வதேச தொடர்களை மேற்கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
55
இந்தியாவுடன் விளையாட சம்மதம்
ஆனால் இவை அனைத்திற்கும் உறுதியான பதில் அளிக்காத ஐசிசி வங்கதேசம் சந்திக்கும் நிதி இழப்பை சமாளிக்கும் வகையில் அடுத்த முறை நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை வங்கதேசத்திற்கு வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், அந்நாட்டு அதிபரிடம் நிலைமையை உணர்த்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் விளையாட முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.