ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணியின் பெரிய குறை இதுதான்..! அதைக்கூட கண்டுபிடிக்காமல் ஆட வந்துட்டாங்க

First Published Aug 26, 2022, 4:06 PM IST

ஆசிய கோப்பை நாளை(ஆகஸ்ட் 27) தொடங்கும் நிலையில், ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி காம்பினேஷனில் இருக்கும் மிகப்பெரிய குறையை சுட்டிக்காட்டியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27(நாளை) முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது.
 

இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்விக்கு ஆசிய கோப்பையில் பதிலடி கொடுக்கும் முனைப்பி ல் களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இதையும் படிங்க - என் கெரியரில் சந்தோஷமான தருணம் இதுதான்! தன் கேப்டன் தோனியை நினைவுகூர்ந்த விராட் கோலி
 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பென்ச் வலிமை பலமாக இருப்பதால், எப்பேர்ப்பட்ட வீரர் ஆடமுடியாமல் தொடரை விட்டு வெளியேறினாலும், அது இந்திய அணியை பாதிக்காது. அந்தளவிற்கு அதிகமான இளம் வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவைத்து பென்ச் பலத்தை வலுப்படுத்தியுள்ளது இந்திய அணி.
 

ஆனால் பாகிஸ்தான் அணி அப்படியல்ல. அந்த அணி, பேட்டிங்கில் பாபர் அசாம், ரிஸ்வான் மற்றும் பவுலிங்கில் ஷாஹீன் அஃப்ரிடி என சில வீரர்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தயங்கி, பென்ச் வலிமையை பலப்படுத்தாதது தான், பாகிஸ்தான் அணியின் பெரிய பலவீனம் என்று சல்மான் பட் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார்.

ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி ஆடவில்லை. இது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாகும். அவரைத்தொடர்ந்து மற்றொரு ஃபாஸ்ட் பவுலரான முகமது வாசிமும் காயமடைந்திருக்கிறார். எனவே இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் தான் பலவீனமாக இருக்கும் என கருதினால், அப்படி அல்ல என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

இதையும்  படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் பலவீனம் குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, பாகிஸ்தான் அணியிடம் விக்கெட் வீழ்த்தும் அளவிற்கான டாப் ஸ்பின்னர் கிடையாது. பாகிஸ்தான் அணியில் நிறைய ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யார் விக்கெட்வீழ்த்துவார்..? ஷதாப்கான் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நன்றாக வீசியிருக்கிறார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் யுஸ்வேந்திர சாஹல், ரஷீத் கான் தரத்தில் பாகிஸ்தான் அணியில் ஸ்பின்னர் இல்லை. உஸ்மான் காதிர் விக்கெட் வீழ்த்தவல்லவர். ஆனால் அவர்  மிகவும் இளமையான வீரர். எனவே இவ்வளவு பெரிய தொடரில் நேரடியாக இறக்கமுடியாது. நவாஸும் அப்படித்தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.

click me!