ஆசிய கோப்பை: ஷாஹீன் அஃப்ரிடியை தொடர்ந்து மற்றொரு ஃபாஸ்ட் பவுலர் காயம்..! பாகிஸ்தான் அணிக்கு மரண அடி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை(27ம் தேதி) தொடங்கவுள்ள நிலையில், ஷாஹீன் அஃப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மற்றொரு ஃபாஸ்ட் பவுலரான முகமது வாசிம் காயமடைந்துள்ளார்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 (நாளை) முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. 
 

இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர்களான பும்ரா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய இருவருமே காயம் காரணமாக அவரவர் அணிக்கு ஆடவில்லை. பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பெரிய பிரச்னையில்லை. ஆனால் ஷாஹீன் அஃப்ரிடிக்கு நிகரான மாற்று வீரர் பாகிஸ்தான் அணியில் இல்லை என்பதால் அஃப்ரிடியின் இழப்பு பாகிஸ்தானை பேரிழப்பே ஆகும்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்


பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான 22 வயதே ஆன ஷாஹீன் அஃப்ரிடி, 25 டெஸ்ட், 32 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் ஆடி முறையே 99, 62 மற்றும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் முக்கியமான பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. அவர் தான் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

எனவே அவர் இந்த ஆசிய கோப்பையில் ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் மற்றொரு ஃபாஸ்ட் பவுலரான முகமது வாசிம் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டுவருகிறது. அதனால் அவர் பயிற்சியில் கூட கலந்துகொள்ளவில்லை. அண்மையில் பாகிஸ்தான் ஆடிய அனைத்து தொடர்களிலும் இடம்பெற்று ஆடியவர் முகமது  வாசிம். ஏற்கனவே ஷாஹீன் அஃப்ரிடி காயத்தால் அவதிப்பட்டுவரும் நிலையில், முகமது வாசிமும் ஆடமுடியாமல் போனால், அது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.
 

Latest Videos

click me!