
MS Dhoni Life Lessons தோனியை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. எதிரணி வீரர்கள் கூட தோனி மதிப்பார்கள். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். கேப்டன் கூல் என்றும் கொண்டாடப்பட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றதோடு, டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார்.
ராஞ்சியில் உள்ள எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்று உலகம் போன்றும் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கும் தோனியிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய 7 விதமான பாடங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
கம்போர்ட்ஷோனிலிருந்து வெளியேறு:
கை நிறைய சம்பளம், வாழ்க்கைக்கு பாதுகாப்பான வேலை இருந்தால் போதும் என்று நினைக்காமல் தோனி அரசு வேலை வேண்டாமென்று தனக்கு பிடித்த கிரிக்கெட் வாழ்க்கையே போதும் என்று ரிஸ்க் எடுத்து கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தார்.
எதையாவது சாதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களது கம்போர்ட்ஷோனியிலிருந்து முதலில் நீங்கள் வெளியேற வேண்டும். தோனி தனக்கு கிடைத்த டிக்கெட் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்ததால் இன்று உலகமே கொண்டாடும் விளையாட்டு வீரராக இருக்கிறார்.
தோனியின் அமைதி:
இக்கட்டான போட்டிகளில் கூட நிதானமாக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி நல்ல முடிவுகளை எடுப்பதால் தோனி கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகிறார். பல போட்டிகளில் தோனி இது போன்று செய்திருக்கிறார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி இப்படி தான் கைப்பற்றியது. அதற்கு தோனியின் சிறந்த முடிவு தான் காரணம். கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மா வீசி கடைசியில் மிஸ்பா உல் ஹக் விக்கெட்டை கைப்பற்றி அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதே போன்று 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக தோனி சிறப்பாக விளையாடி 91 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆனால், அவருக்கு எதிராக இலங்கையின் சிறந்து பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனை வைத்து தோனியை ஆட்டமிழக்கச் செய்யலாம் என்று அவரை கொண்டு வந்தனர். எனினும், அவரது ஓவர்களை அமைதியாக எதிர்கொண்டு அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
நம்பிக்கை:
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் முதலில் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் உங்களை நம்புவதற்கு தோனியின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். அவர் தனது டிக்கெட் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்பும் போது அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், கிரிக்கெட் மீது தனக்கு இருந்த ஆர்வத்தை நனவாக்க வேண்டும் என்று தோனி முதலில் தன்னை நம்பினார். முதல் போட்டியிலே டக் அவுட்டிலும் வெளியேறினார். அதன் பிறகு பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் செய்து தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து கட்டத்திற்கு சென்று இன்று உச்சத்தில் இருக்கிறார். ரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர்.
தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும்:
பள்ளியில் படிக்கும் போதே சிறந்த கிரிக்கெட் வீரர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கூட இதைப் பற்றி பார்த்திருப்போம். எனினும், 19 வயதுகு உட்பட்ட அணியில் அவருக்கு இடம் கிடைக்காது. இதனால், வருந்தமடைந்த அவர் தனது இலக்கை அடைய இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
கிரிக்கெட்டில் அறிமுகமான போது தோனி முதல் 4 சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு தோல்விகளை ஏற்றுக் கொண்ட தோனி எங்கு தவறு செய்கிறோம் என்பதை உணர்ந்து கடுமையாக உழைத்து சிறந்த பேட்ஸ்மேனானார்.
வாழ்க்கை மற்றும் வேலை – சமநிலை:
தோனி எப்போது தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். கிரிக்கெட் போட்டிகள் இல்லாத போது எப்போது மனைவி மற்றும் மகள் உடன் ராஞ்சி பண்ணை வீட்டில் தான் நேரத்தை செலவிடுவார். பைக் மற்றும் கார்களை விரும்பக் கூடிய தோனியின் வீட்டில் அளவுக்கு அதிகமான கார்கள் மற்றும் பைக்குகளை நிறுத்தி வைத்திருக்கிறார். தோனிக்கு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளும் பிடிக்கும். கால்பந்தும், டென்னிஸூம் விளையாடுவார்.
கற்றுக் கொள்வதை நிறுத்த கூடாது:
பள்ளிப் பருவத்தில் தோனி கால்பந்து விளையாடவே விரும்பினார். ஆனால், அவர் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டு விக்கெட் கீப்பராக பயிற்சி மேற்கொண்டார். ஆனால், ஒரு போதும் கற்றுக் கொள்வதை நிறுத்தவில்லை. விளையாட்டை நெருக்கமாக பார்த்து அதனுடைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொண்டார். எப்போதும் வலையில் பயிற்சியில் ஈடுபடுவார். இது அவரை சிறந்த விக்கெட் கீப்பர் மற்று பேட்ஸ்மேனாக உருவாக்கியது.
பாதைகளை மறந்துவிடக் கூடாது:
எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் கூட தோனியின் நண்பர்களுடனான உறவு அப்படியே இருந்தது. வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதைகளையும், இந்த சாதனைக்காக அவர் எவ்வளவு போராடினார் என்பதை நன்றாகவே அறிந்திருந்தார். தோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க அவரது நண்பர்களால் மட்டுமே கட்டுக் கொடுக்க முடிந்தது.
இது போன்று பல விஷயங்களை நீங்களும் பின்பற்றி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்கலாம். தோனியை பிடிக்கும் ரசிகர்கள் இந்த டெக்னிக்கை தான் பாலோ பண்ணுவார்கள்.