சித்ரா பௌர்ணமி பூஜைக்கு இத்தனை நன்மைகள் உள்ளதா?

First Published | May 3, 2023, 6:00 PM IST

சித்ரா பௌர்ணமியை சித்திரையின் முழு நிலவு நாளில் கொண்டாடுவார்கள். இந்தாண்டு மே 5 ஆம் தேதியில் சித்ரா பௌர்ணமி வருகிறது. 

சித்ரா பௌர்ணமி முக்கியமான இந்து பண்டிகை. தமிழ்நாட்டில் பெரும்பாலான இந்து மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வார்கள். இந்த நன்னாளில் செய்யும் சித்ரகுப்தர் வழிபாடு, சந்திரன் வழிபாடு உங்களுடைய வாழ்வில் செழிப்பையும் ஆசியையும் தரும். இந்த ஆண்டு சந்திர கிரகணமும், சித்ரா பௌர்ணமியும் இணைந்து வருகின்றன. அதனால் கூடுதல் சிறப்பு. 

சித்ரா பௌர்ணமி முக்கியத்துவம் 

ஆண்டின் புனிதமான நாளில் சித்ரா பௌர்ணமியும் குறிப்பிடத்தகுந்தது. இந்து சாஸ்திரங்களின்படி, சித்ரா பௌர்ணமி அன்று பிரம்மா இந்த உலகத்தை படைத்ததாக கூறப்படுகிறது. பார்வதி தேவி முருகனை பெற்றெடுத்ததும், சிவனுடைய பிரபஞ்ச நடனமும் சித்ரா பௌர்ணமி அன்று தான் நிகழ்ந்தது. ஒவ்வொரு தனிமனிதரின் கர்மாவையும் மேம்படுத்த சித்ரா பௌர்ணமியில் பூஜை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. ஒருவருடைய புத்தி கூர்மையும், ஞான மேம்பாடும் சித்ரா பௌர்ணமி அன்று பூஜை செய்வதால் மேம்படும் என்றும் நம்பப்படுகிறது..

Latest Videos


sharad purnima upay

சித்ரா பௌர்ணமி பூஜை 

சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் பொருளாதார பிரச்சனை நீங்கும். மன நிம்மதி கிடைக்கும். மதுரை, திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு சித்ரா பௌர்ணமியில் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். வீட்டிற்கு அருகே உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டாலும் புண்ணியம் கிடைக்கும். 

யாரை வழிபடலாம்?

சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தர் வழிபாடு, சந்திரன் வழிபாடு, சிவன் பார்வதி ஆகியோருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யலாம். இதனால் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும். சந்திரனை வழிபட்டால் மனக்குழப்பங்கள் தீரும் என்பது ஐதீகம். 

இதையும் படிங்க: வீட்டில் பணம் சேர! இந்த திசையில் 1 சிலந்தி செடி வைங்க! Spider Plant வைத்தால் இவ்வளவு நன்மைகள்!

சித்ரா பௌர்ணமி 

இந்த நன்னாளில் விரதமிருந்து சித்ர குப்தர், சந்திர பகவானை வழிபடுவதால் கடன் தொந்தரவு ஒழியும். மனம் தெளிவு பெறும். கையில் பணம் தங்கும். பாவங்கள் நீங்கும். குறிப்பாக சித்ரா பௌர்ணமி தினத்தில் 4 பேர் முதல் 5 பேர் வரை அன்னதானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். சித்ரா பெளர்ணமி நாளில் சத்ய நாராயணனுக்கும் பூஜை செய்து வழிபடலாம். 

சித்ரா பௌர்ணமி செய்ய வேண்டியவை 

சித்ரா பௌர்ணமி அன்று இரவு 7 மணிக்கு பின்னர் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். வீட்டின் மாடி, நுழைவாயில் என சந்திர தரிசனம் முழுமையாக கிடைக்கும் இடங்களில் 5, 9, 11 என்ற கணக்கில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபங்களில் ஒரு விளக்கு நெய் தீபமாக இருப்பது அவசியம். இப்படி விளக்கேற்றி சந்திரனையும் சித்திரகுப்தரையும் வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். பூஜையில் சந்திரனுக்கும், சித்திரகுப்தருக்கும் படைத்த நைவேத்தியங்களை இரவில் நிலாச்சோறாக உண்ண வேண்டும். 

இதையும் படிங்க: சந்திர கிரகணம் 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுவிவரம்...

click me!